தொப்பியில் நிற்போம்..ஜெயிப்போம்.. இரட்டை இலையை மீட்போம் - தங்க தமிழ் செல்வன் #RKnagarPoll
அதிமுக அம்மா அணி சார்பில் தொப்பிச்சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று இரட்டை இலையை மீட்போம் என்று டிடிவி தினகரன் ஆதரவாளர் தங்க தமிழ்செல்வன் கூறியுள்ளார்.
Recommended Video

சென்னை: ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவது உறுதி என்று டிடிவி தினகரன் ஆதரவாளர் தங்க தமிழ் செல்வன் கூறியுள்ளார். இரட்டை இலை சின்னத்தை மீட்போம் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் டிசம்பர் 21ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
ஆர்.கே.நகரில் இடைத்தேர்தல் நடைபெற்றால் போட்டியிடுவது உறுதி என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

தேர்தல் ஆணையம் தீர்ப்பு
கடந்த ஏப்ரல் மாதம் ஆர்.கே. நகருக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அப்போது ஓபிஎஸ் சசிகலா அணி இரட்டை இலைக்கு மோதியதால் சின்னத்தை முடக்கியது. 7 மாதங்களுக்குப் பின்னர் அதிமுக கட்சி, கொடி, சின்னத்தை மதுசூதனன் தலைமையிலான அணிக்கு தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது. இந்தநிலையில் ஆர்.கே.நகருக்கு இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

டிடிவி தினகரன் ஆதரவாளர்
டிசம்பர் 21ஆம் தேதி நடைபெறும் தேர்தலில் அதிமுக அம்மா அணி சார்பில் வேட்பாளர் நிறுத்தப்படுவது உறுதி என்று டிடிவி தினகரன் அணி ஆதரவாளர் தங்கத்தமிழ் செல்வன் கூறியுள்ளார்.

துரோகிகளுக்கு எதிரான பிரச்சாரம்
வெற்றிச்சின்னமான தொப்பிச்சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெறுவது உறுதி என்றும் தங்க தமிழ் செல்வன் கூறியுள்ளார். துரோகிகளை மையமாக வைத்து தங்களின் பிரச்சாரம் அமையும் என்றும் தங்க தமிழ் செல்வன் தெரிவித்துள்ளார்.

போட்டியிடுறோம் ஜெயிக்கிறோம்
அதிமுக அம்மா அணி நாங்கதான், துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்தான். போட்டியிடுறோம், ஜெயிக்கிறோம். இரட்டை இலையை மீட்போம் என்றுத் தங்க தமிழ் செல்வன் கூறியுள்ளார்.

ஜெயிப்பது உறுதி
ஆளுங்கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் யார் என்று இதுவரை அறிவிக்கப்படவில்லை.
இந்த நிலையில் அதிமுக அம்மா அணி சார்பில் தொப்பிச்சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெறுவோம் என்றும், இரட்டை இலை சின்னத்தை மீட்போம் என்றும் கூறியுள்ளார் தங்க தமிழ் செல்வன்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications