Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எடப்பாடியுடன் திடீர் சந்திப்பு... நிதி அமைச்சராகிறாரா தினகரன் ஆதரவாளர் தங்கதமிழ்ச் செல்வன்?

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை இன்று தலைமை செயலகத்தில் எம்எல்ஏ தங்கதமிழ்ச் செல்வன் சந்தித்து பேசினார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: தினகரன் ஆதரவாளரான ஆண்டிப்பட்டி எம்எல்ஏ தங்க தமிழ்ச் செல்வன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை இன்று சந்தித்து பேசினார்.

ஜெயலலிதா மறைந்த பிறகு அதிமுக இரு அணிகளாக பிரிந்தது. இதைத் தொடர்ந்து பெரும்பான்மையை நிரூபிக்க சசிகலா அணியை சேர்ந்த 122 எம்எல்ஏ-க்களும் கூவத்தூர் சொகுசு விடுதியில் சிறைபிடிக்கப்பட்டனர்.

அப்போது பணம், தங்கம், அமைச்சர் பதவி என பல்வேறு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து எம்எல்ஏ-க்கள் தொகுதி பக்கமே செல்லாமல் கூவத்தூரில் குதூகலமாக இருந்தனர். ஒரு வழியாக பெரும்பான்மை நிரூபிக்கப்பட்டு எடப்பாடி பழனிச்சாமி முதல்வரானார்.

 இரட்டை இலைக்கு லஞ்சம்

இரட்டை இலைக்கு லஞ்சம்

இந்த நிலையில் சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலாவும், இரட்டை இலை சின்னத்தை பெற தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் தினகரனும் சிறை சென்றார். இதனால் எம்எல்ஏ-க்களுக்கு அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமல் இருந்தது.

 அதிமுக இணைப்பு

அதிமுக இணைப்பு

முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தை மீட்டெடுக்க அதிமுகவின் இரு அணிகளும் இணைய வேண்டும் என்று முடிவு செய்தனர். ஆனால் டிடிவி தினகரனை ஒதுக்கி வைக்கும் முடிவுக்கு தினகரன் ஆதரவாளர்களான தங்கதமிழ்ச் செல்வன், கதிர்காமம், வெற்றி வேல் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

 தனித்தனி அணியாக...

தனித்தனி அணியாக...

தோப்பு வெங்காடசலம், செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் அடங்கிய 10 எம்எல்ஏ-க்களும், இன்னம் பிற 15 எம்எல்ஏ-க்களும் தனி அணியாக செயல்பட்டு கூவத்தூர் வாக்குறுதிகள் குறித்து விவாதித்தனர். இன்னும் நிறைவேற்றப்படாதது குறித்து அதிருப்தி தெரிவித்தனர்.

 தினகரனுக்கு ஆதரவு பெருக்கம்

தினகரனுக்கு ஆதரவு பெருக்கம்

இந்நிலையில் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த தினகரனுக்கு ஆதரவு பெருகி வருவதால் அதிருப்தியில் உள்ள எம்எல்ஏ-க்களை சமரசப்படுத்தும் முயற்சியில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஈடுபட்டு வருகிறார். தினகரன் வெளியே வருவதற்கு முன்னதாகவே சட்டசபை கூட்டினால் பெரும்பான்மை பலத்தை இழந்து விடுவோம் என்ற பயத்தின் காரணமாக தோப்பு கோஷ்டி உள்ளிட்டோரை முதல்வர் சமாதானம் செய்தார்.

 தங்கதமிழ்ச்செல்வன் சந்திப்பு

தங்கதமிழ்ச்செல்வன் சந்திப்பு

தற்போது தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை தினகரன் ஆதரவாளர் தங்கதமிழ்ச் செல்வன் சந்தித்தார். அப்போது அவர் கேட்டு வரும் நிதி அமைச்சர் பதவி குறித்தும் விவாத்திருக்கலாம் என்று தெரிகிறது. சட்டசபை கூடவுள்ள நிலையில் எம்எல்ஏ-க்களை முதல்வர் சமாதானப்படுத்துவதாகவே கருதப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+