வெளியில போய்ட்டு மறுபடியும் வந்தா பதவி தர மாட்டோம்.. தங்கபாலு வார்னிங்!
சேலம்: காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறி மீண்டும் திரும்பி வருவோருக்கு பதவிகள் எதுவும் தரப்பட மாட்டாது என்று முன்னாள் காங்கிரஸ் தலைவர் தங்கபாலு கூறியுள்ளார்.
வாசன் வெளியேறியதைத் தொடர்ந்து காங்கிரஸ் கோஷ்டிகள் சுறுசுறுப்பாகியுள்ளன. புதிய தலைவரான ஈவிகேஎஸ் இளங்கோவன் கட்சியைப் பலப்படுத்தும் வேலையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

இந்த நிலையில் முன்னாள் தலைவர் தங்கபாலு, சேலம் முள்ளுவாடி கேட் பகுதியில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் சனிக்கிழமை நடந்த நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசுகையில்,
காங்கிரஸ் கட்சியை யாராலும் பிளவுப்படுத்த முடியாது. சில நேரங்களில் சிலர் வருவார்கள், சிலர் போவார்கள், அதுபோல் தான் இப்போது நடந்துள்ளது. லட்சக்கணக்கான தொண்டர்கள் காங்கிரசில் உள்ளனர். தமிழகத்தில் உண்மையான காங்கிரஸ் நாம் இருக்கும் இடம் தான்.
இனி காங்கிரஸ் விசுவாசிகளுக்குத்தான் பதவி. அன்னை சோனியா காந்தி, தலைவர் ராகுல் காந்தியை ஏற்றுக் கொள்பவர்களுக்குத்தான் பதவி. வெளியில் சென்று மீண்டும் வருபவர்களுக்கு பதவி கிடையாது. கட்சிக்கு உழைப்பவர்களுக்கு உரிய மரியாதையை பெற்று தருவோம்.
தமிழக மக்களின் எதிர்காலத்திற்கு தேவையான ஆக்கபூர்வமான பணிகளில் காங்கிரஸ் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் ஈடுபடுவார்கள். தமிழக மக்களின் வாழ்வாதாரம் உயர பாடுபடுவோம். ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்களுக்கு உழைக்கும் கட்சி காங்கிரஸ் கட்சி. தமிழகத்தில் மீண்டும் காமராஜ் ஆட்சி ஏற்பட உழைப்போம் என்றார் தங்கபாலு.
-
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications