ஒன்இந்தியா வாசகர்களே உங்களுக்கு மனமார்ந்த நன்றி.. நெகிழ்ச்சியுடன் கூறும் தந்தை, மகள்!
திருச்சி: மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கோமாவில் இருந்த சிறுமி சாருப்ரியா ஒன்இந்தியா வாசகர்கள் செய்த நிதியுதவி மற்றும் பிரார்த்தனையால் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.
திருச்சியை சேர்ந்த ஆட்டோ டிரைவரான கணேச மூர்த்தி என்பவரின் மகள் சாருப்ரியா (13). ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளிக்கு சென்று வந்த சிறுமிக்கு கடந்த மாதம் துவக்கத்தில் மூளைக்காய்ச்சல் ஏற்பட்டு திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதித்தனர்.
கோமாவுக்கு சென்றுவிட்ட சிறுமிக்கு அடிக்கடி ஃபிட்ஸ் வந்ததால் சிகிச்சை அளிக்க முடியாமல் மருத்துவர்கள் திணறினர். இந்நிலையில் வறுமையில் உள்ள கணேச மூர்த்தியால் மருத்துவ செலவை சமாளிக்க முடியவில்லை.
பணக் கஷ்டத்தால் சிகிச்சையை தொடர முடியாத நிலைக்கு கணேச மூர்த்தி தள்ளப்பட்டார். மகளை காப்பாற்ற வேண்டும் ஆனால் பணம் இல்லாமல் சிகிச்சையை நிறுத்த வேண்டிய நிலைக்கு வந்துவிட்டோமே என கண்ணீர் சிந்திய கணேச மூர்த்திக்கு ஒன்இந்தியா வாசகர்கள் கை கொடுத்தனர்.
சாருப்ரியாவின் நிலை குறித்து நம் இணையதளத்தில் வெளியான செய்தியை பார்த்துவிட்டு ஏராளமான வாசகர்கள் கணேச மூர்த்தியை தொடர்பு கொண்டு பேசி ஆறுதல் கூறியதுடன் போதிய நிதியுதவி செய்து சிகிச்சையை தொடர உதவினர்.
வாசகர்களின் தாராள மனதால் சாருப்ரியா சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். ஒரு மாதத்திற்கும் மேலாக ஐசியு பிரிவில் இருந்ததால் சிறுமி சோர்வாக உள்ளார். வீட்டிற்கு வந்ததும் சிறுமியும், அவரது தந்தையும் வாசகர்களாகிய உங்களுக்கு நன்றி கூறும் வகையில் வீடியோ ஒன்றை எடுத்து எங்களுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
திக்கற்று நின்றபோது உதவிய ஒன்இந்தியா வாசகர்களை உயிருள்ள வரை மறக்க மாட்டோம் என கணேச மூர்த்தி கண்ணீர் மல்க நம்மிடம் தெரிவித்துள்ளார்.
-
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
திருச்சி மேடையில் அதை பேசியிருக்கனும்.. முதல்வர் விஜய்யின் உரை ஏமாற்றம்! ஆதங்கப்பட்ட அன்புமணி -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications