திருச்சி, கடலூர், அரியலூர்,பெரம்பலூர் மாவட்டங்களில் திமுக ஆதிக்கம் - தந்தி டிவி கருத்துக்கணிப்பு
சென்னை: சட்டசபை தேர்தலில் திருச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் உள்ள சட்டசபை தொகுதிகளில் யாருக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது என்று தந்தி டிவி நடத்திய கருத்துக்கணிப்பில் திமுக கூட்டணி கட்சிகளின் கை ஓங்கியுள்ளது.
அம்மாவட்டங்களில் மொத்தமுள்ள 21 தொகுதிகளில் 10 தொகுதிகளில் திமுக கூட்டணி கட்சிகளுக்கு வாக்களிப்போம் என்று வாக்காளர்கள் ஆதரவான கருத்துக்களை தெரிவித்துள்ளனர். அதிமுகவிற்கு 7 தொகுதிகளில் வாக்காளர்களின் ஆதரவு உள்ளது.
சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை தொகுதிகளில் சற்றே ஊசலாட்டமான மனநிலையில் மக்கள் உள்ளனர். விருதாச்சலம் தொகுதியில் திமுக, அதிமுகவைப் போல தேமுதிகவிற்கும் மக்களின் அபரிதமான ஆதரவு உள்ளது தெரியவந்துள்ளது.
திருச்சி, கடலூர் அரியலூர், பெரம்பலூர், மாவட்டங்களில் யாருக்கு எந்த தொகுதிகளில் வாக்காளர்களின் ஆதரவு உள்ளதை என்பதை தொகுதிவாரியாக பார்க்கலாம்.

திருச்சி மேற்கு தொகுதி
திமுக 40 - 46 சதவிகிதம்
அதிமுக 37 - 43 சதவிகிதம்
தேமுதிக 6 - 12 சதவிகிதம்
பிற கட்சிகள் 4 - 10 சதவிகிதம்

திருச்சி-கிழக்கு
அதிமுக 39 - 45 சதவிகிதம்
காங்கிரஸ் 35 -41 சதவிகிதம்
மதிமுக 8 - 14 சதவிகிதம்
பிற கட்சிகள் 3 - 9 சதவிகிதம்

திருவெறும்பூர்
திமுக 40 - 49
அதிமுக 38 - 44
தேமுதிக 5 - 11
பிற கட்சிகள் 2 - 8

லால்குடி தொகுதி
திமுக 40 - 46
அதிமுக 36 - 42
மா.கம்யூனிஸ்ட் 5 - 11
பிறகட்சிகள் 3 - 10 சதவிகிதம்
நோட்டா 3 சதவிகிதம்

மணச்சநல்லூர்
அதிமுக 39 - 45 சதவிகிதம்
திமுக 38 - 44 சதவிகிதம்
தேமுதிக 6 - 12 சதவிகிதம்
பிற கட்சிகள் 3 - 9 சதவிகிதம்
நோட்டா 2 சதவிகிதம்

முசிறி தொகுதி
அதிமுக 41 - 47 சதவிகிதம்
காங்கிரஸ் 40 - 46 சதவிகிதம்
தமாகா 5 - 11 சதவிகிதம்
பிறகட்சிகள் 3 சதவிகிதம்
நோட்டா 2 சதவிகிதம்

துறையூர் தனி தொகுதி
திமுக - 40 - 46 சதவிகிதம்
அதிமுக 37 - 43 சதவிகிதம்
விசிக 6 - 12 சதவிகிதம்
பிற கட்சிகள் 2 - 8 சதவிகிதம்

ஜெயங்கொண்டம்
அதிமுக 29 - 35 சதவிகிதம்
காங்கிரஸ் 28 - 34 சதவிகிதம்
பாமக 19 - 25 சதவிகிதம்
பிறகட்சிகள் 9 - 15 சதவிகிதம்

பெரம்பலூர் (தனி)
சமத்துவ சமுதாய படை 43 - 49 சதவிகிதம்
அதிமுக 37 - 43 சதவிகிதம்
தேமுதிக 5 - 11 சதவிகிதம்
பிற கட்சிகள் 1 - 7 சதவிகிதம்

குன்னம்
திமுக 33 - 39 சதவிகிதம்
அதிமுக 29 - 35 சதவிகிதம்
விசிக 17 - 23 சதவிகிதம்
பிற கட்சிகள் 8 - 14 சதவிகிதம்
நோட்டா 1 சதவிகிதம்

அரியலூர் தொகுதி
அதிமுக 38 - 45 சதவிகிதம்
திமுக 35 - 41 சதவிகிதம்
தேமுதிக 7 - 11 சதவிகிதம்
பிற கட்சிகள் 6 - 11 சதவிகிதம்

திட்டகுடி(தனி)
திமுக 37 - 43 சதவிகிதம்
அதிமுக 34 - 40 சதவிகிதம்
தேமுதிக 11 - 17 சதவிகிதம்
பிற கட்சிகள் 6 - 12 சதவிகிதம்

விருத்தாச்சலம்
திமுக 30 - 36 சதவிகிதம்
அதிமுக 27 - 33 சதவிகிதம்
தேமுதிக 24 - 30 சதவிகிதம்
பிற கட்சிகள் 6 - 10 சதவிகிதம்

நெய்வேலி
அதிமுக 37 - 43 சதவிகிதம்
திமுக 32 - 38 சதவிகிதம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 12 - 18 சதவிகிதம்
பிறகட்சிகள் 5 - 11 சதவிகிதம்
நோட்டா 2 சதவிகிதம்

பண்ருட்டி
அதிமுக 37 - 43 சதவிகிதம்
விவசாய தொழிலாளர் கட்சி 35 - 44 சதவிகிதம்
தேமுதிக 7 - 13 சதவிகிதம்
பிற கட்சிகள் 8 - 14 சதவிகிதம்

குறிஞ்சிப்பாடி
திமுக 42 - 48 சதவிகிதம்
அதிமுக 28 - 34 சதவிகிதம்
தேமுதிக 10 - 16 சதவிகிதம்
பிற கட்சிகள் 6 - 12 சதவிகிதம்

புவனகிரி தொகுதி
திமுக 35 - 41 சதவிகிதம்
அதிமுக 24 - 30 சதவிகிதம்
விசிக 16 - 22 சதவிகிதம்
பாமக 9 - 15 சதவிகிதம்
பிறகட்சிகள் 3 சதவிகிதம்
நோட்டா 1 சதவிகிதம்

சிதம்பரம் தொகுதி
திமுக 40 - 46 சதவிகிதம்
அதிமுக 37 - 43 சதவிகிதம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 9 - 15 சதவிகிதம்
பிற கட்சிகள் 2 - 8 சதவிகிதம்

சீர்காழி (தனி)
திமுக 38 - 44 சதவிகிதம்
அதிமுக 37 - 43 சதவிகிதம்
தேமுதிக 9 - 15 சதவிகிதம்
பிற கட்சிகள் 4 - 10 சதவிகிதம்

மயிலாடுதுறை தொகுதி
அதிமுக 37 - 43 சதவிகிதம்
திமுக 35 - 41 சதவிகிதம்
தேமுதிக 10 - 16 சதவிகிதம்
பிற கட்சிகள் 6 - 12 சதவிகிதம்

திமுக ஆதரவு அலை
திருச்சி மேற்கு, திருவெறும்பூர், லால்குடி, துறையூர், பெரம்பலூர் தனி, குன்னம், திட்டக்குடி, குறிஞ்சிப்பாடி
புவனகிரி தொகுதிகளில் திமுக கூட்டணி கட்சிகளுக்கு வாக்களிப்போம் என்று மக்கள் தெரிவித்துள்ளதாக தந்தி டிவி கருத்துக்கணிப்பு கூறுகிறது.

அதிமுக ஆதரவு அலை
திருச்சி கிழக்கு, மணச்சநல்லூர், முசிறி, ஜெயங்கொண்டம், அரியலூர்,நெய்வேலி, பண்ருட்டி ஆகிய தொகுதிகளில் அதிமுக கூட்டணி கட்சிகளுக்கு வாக்களிப்போம் என்று மக்கள் கூறியுள்ளதாக கூறுகிறது தந்தி டிவி கருத்துக்கணிப்பு.

தேமுதிகவிற்கும் வாய்ப்பு
விருதாச்சலம் சட்டசபை தொகுதியில் அதிமுக, திமுக, தேமுதிக ஆகிய மூன்று கூட்டணி கட்சிகளுக்கும் சமமான அளவில் வாய்ப்பு உள்ளதாக தந்தி டிவி கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த்












Click it and Unblock the Notifications