யார் சிறப்பாக செயல்படுவார்கள்..? ரஜினிகாந்த்தா, கமல்ஹாசனா? கருத்து கணிப்பு ரிசல்ட்டில் ஆச்சரியம்
Recommended Video

சென்னை: நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் அரசியல் பற்றி தந்தி டிவி கருத்து கணிப்பு நடத்தி வருகிறது. லோக்சபா தேர்தலுக்கு இன்னும் ஓராண்டே உள்ள நிலையில், கருத்து கணிப்பு முக்கியத்துவம் பெறுகிறது.
மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் கட்சி துவங்கி, சினிமாவை போலவே, அரசியலிலும் ரஜினிகாந்த்துக்கு முன்பே என்ட்ரி ஆகிவிட்டார் கமல்ஹாசன். லேட்டாக வந்தாலும் லேட்டஸ்ட்டாக வருவேன் என கூறி சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வளர்ந்ததை போல அரசியலிலும் சாதிக்கலாம் என நினைத்து அஸ்திவாரத்தை பலமாக்குவதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார் ரஜினிகாந்த்.
பெரும்பாலும் சினிமா பின்னணி கொண்டவர்களே தமிழக அரசியலில் கோலோச்சியுள்ளதால், உச்ச நட்சத்திரங்களாக கோலோச்சிய ரஜினிகாந்த், கமல்ஹாசனின் அரசியல் வருகை அதிக முக்கியத்துவத்தை பெற்றுள்ளது.

நம்பிக்கையின்மை அதிகம்
எனவே இதுகுறித்த கருத்துக் கணிப்பை தந்தி டிவி நடத்தியுள்ளது. பல தலைப்புகளில் கேள்விகளை எழுப்பி மக்களிடம் விடை பெற்றுள்ளது. இதுகுறித்த தகவல்கள் வியப்பானதாக உள்ளது. இருவர் மீதும் மக்கள் வைத்துள்ள நம்பிக்கையைவிட, நம்பிக்கையின்மையே அதிகமாக தென்படுகிறது. எனவே இருவருமே மக்கள் அபிமானத்தை பெற இன்னும் அதிகம் உழைக்க தேவையுள்ளது என்ற உண்மையை இந்த கருத்துக் கணிப்பு எடுத்துரைக்கிறது.
|
யார் சிறப்பாக செயல்படுவார்கள்
தற்போதைய சூழலில் யார் சிறப்பாக செயல்பட முடியும் என நினைக்கிறீர்கள்..? என்ற கேள்விக்கு,
ரஜினிகாந்த் என்று 16 சதவீத மக்களும், கமல்ஹாசன் என்று 15 சதவீதம் பேரும் கூறியுள்ள நிலையில், இருவருமே அல்ல என்று 69 சதவீதம் பேர் கருத்து கூறியுள்ளனர்.
|
சாதிக்க மாட்டார்கள்
ரஜினி, கமல், அரசியலில் சாதிப்பார்களா என்ற கேள்விக்கு,
சாதிப்பார்கள் என்று 23 சதவீதம் பேரும், பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என்று 26 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர். சாதிக்க மாட்டார்கள் என்று 51 சதவீதம் பேர் கருத்து கூறியுள்ளனர்.
|
சமூக அக்கறை குறைவு
அரசியலில் ரஜினி, கமல் பற்றி உங்கள் கருத்து? என்ற கேள்விக்கு, சமூக அக்கறை என்று 28 சதவீதம் மக்களும், சந்தர்ப்பவாதம் என்று 48 சதவீதம் பேரும், இரண்டுமே என்று 24 சதவீதம் பேரும் கருத்து கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications