ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன் வெற்றி வாய்ப்பு எப்படி? கடும் போட்டியா இருக்கே.. தந்தி டிவி சர்வே
சென்னை: கடந்த முறை அதிமுக சார்பில் ஆலங்குளம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மனோஜ் பாண்டியன் இந்த முறை திமுகவில் இணைந்து அதே தொகுதியில் களம் காண்கிறார். இந்த நிலையில் தந்தி டிவி நடத்திய கருத்துக்கணிப்பில் மனோஜ் பாண்டியனை விட அதிமுக சார்பில் களம் இறங்கியுள்ள கேடிஆர் பிரபாகரனே அதிக வாக்கு சதவீதம் பெற வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளது.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தொகுதி இந்த தேர்தலில் கவனம் பெற்று இருக்கிறது. அதிமுக செல்வாக்கு மிகுந்த தொகுதிகளில் ஒன்றாக அம்பை தொகுதி உள்ளது. இதற்கு அருகில் உள்ள தொகுதியான ஆலங்குளத்தில் அதிமுக மற்றும் திமுக மாறி மாறியே ஆட்சி அமைத்துள்ளன.

மனோஜ் பாண்டியன் வெல்வாரா?
நாடார் சமுதாய மக்கள் மற்றும் தேவர் சமுதாய மக்கள் அதிகம் உள்ள தொகுதியான ஆலங்குளத்தில் பீடி சுற்றும் தொழிலாளர்கள் அதிகம் உள்ளனர். இந்த தொகுதியில் கடந்த முறை வெற்றி பெற்ற மனோஜ் பாண்டியன் திமுக சார்பில் வேட்பாளராக களம் இறங்கியுள்ளார். அதே சமயம் அதிமுக சார்பில் கேடிஆர் பிரபாகரன் களம் இறங்கியுள்ளார். விஜய்யின் தவெக சார்பில் விபின் சக்கரவர்த்தியும், நாம் தமிழர் கட்சி சார்பில் பால்ராஜும் போட்டியிடுகின்றனர்.
இதில் தந்தி டிவி நடத்திய கருத்துக்கணிப்பில் ஆலங்குளம் தொகுதியில் அதிமுகவுக்கு அதிக வாக்குகள் கிடைக்கும் என கூறியுள்ளது. அதாவது ஆலங்குளம் தொகுதியில் அதிமுக 37 முதல் 43 சதவீத வாக்குகள் பெறும் என்றும், திமுக சார்பில் 34 முதல் 40 சதவீத வாக்குகள் பெறும் என கணித்துள்ளது. விஜய்யின் தவெக 9 முதல் 15 சதவீத வாக்குகளும், நாம் தமிழர் கட்சி 6 முதல் 12 சதவீத வாக்குகளும் பெறும் என கணித்துள்ளது.
ஆலங்குளம் தொகுதி (தந்தி டிவி கருத்துக்கணிப்பு)
* அதிமுக: 37 - 43 சதவீத வாக்குகள்
* திமுக: 34 - 40 சதவீத வாக்குகள்
* தவெக: 9 - 15 சதவீத வாக்குகள்
* நாம் தமிழர்: 6 - 12 சதவீத வாக்குகள்
* பிற கட்சிகள்: 1 - 5 சதவீத வாக்குகள்
யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காது?
தமிழக சட்டசபை தேர்தல் நாளை மறுநாள் வியாழக்கிழமை நடக்கிறது. இன்று மாலையுடன் பிரசாரம் முடிய உள்ள நிலையில் பல கருத்துக்கணிப்புகள் வெளியாகி உள்ளது. பல முன்னணி நிறுவனங்கள் நடத்தியுள்ள கருத்துக்கணிப்பில் திமுகவே மீண்டும் ஆட்சியமைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
இதில் தந்தி டிவி நடத்திய கருத்துக்கணிப்பில், திமுக மற்றும் அதிமுக இரு கட்சிகளுக்கும் மெஜாரிட்டி கிடைக்காது என்பதை காட்டுவதாகவே தெரிகிறது. திமுக கூட்டணி 98 தொகுதிகளில் எளிதில் வெற்றி பெற வாய்ப்புள்ளது எனவும், அதிமுக கூட்டணி 91 தொகுதிகளில் எளிமையாக வெல்ல வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதுதவிர 43 தொகுதிகளில் கடும் போட்டி நிலவும் என கூறியுள்ளது.
சீமான் கட்சி ஒரு தொகுயிலும் வெற்றி பெறாது
அதே சமயம் விஜய்யின் தவெக பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது எனவும், சீமானின் நாம் தமிழர் கட்சி ஒரு இடங்களில் கூட வெற்றி பெறாது என்றும் தந்தி டிவி நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள் கூறியுள்ளன. சீமானின் நாம் தமிழர் கட்சி கடந்த முறையை போலவே இந்த சட்டசபை தேர்தலிலும் தனித்து களம் காண்கிறது.
இந்த முறை காரைக்குடியில் சீமான் களம் காண்கிறார். ஆனால் சீமானின் நாம் தமிழர் கட்சி காரைக்குடி உள்பட ஒரு தொகுதியிலும் வெற்றி பெறாது என தந்தி டிவி நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவித்துள்ளன.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications