அரசியல் பிரவேசமா? அத்தை ஜெ.வுடன் விரிசல் ஏன்? தந்தி டிவியில் தீபாவின் பரபர பேட்டி நாளை ஒளிபரப்பு!
ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவின் பிரத்யேக பேட்டி நாளை திங்கட்கிழமை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளதாக தந்தி டிவி அறிவித்துள்ளது.
சென்னை: தீபா என்ற பெயர் இப்போது ஊடக வெளிச்சத்தில் அடிபடும் பெயராக உள்ளது. ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயக்குமாரின் மகள்தான் தீபா. பிறந்தது முதல் போயஸ்கார்டனில் வேதா நிலையத்தில் ஜெயலலிதாவின் நிழலில் வளர்ந்த தீபா, இப்போது போயஸ் கார்டனுக்குள் நுழைய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
சொந்த அத்தை ஜெயலலிதாவின் மரணத்திற்கு கூட அருகில் இருந்து அஞ்சலி செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது. உடல் நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்த ஜெயலலிதாவை பார்க்க சென்ற போது விரட்டப்பட்டார். இதன் காரணமாக ஊடகத்திடம் தனது நிலையை வெளிப்படுத்தினார். ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பின்னரும் தீபாவை ஊடகங்கள் பின் தொடர்கின்றன.

பத்திரிகையாளரான தீபாவிடம் பல கேள்விகளை முன் வைத்து தந்தி டிவி கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சிக்காக பேட்டி கண்டுள்ளது. இந்த பேட்டி சனி, ஞாயிறு ஒளிபரப்பாகும் என்று கூறப்பட்ட நிலையில் திடீரென ரத்தானது. இந்த நிலையில் இந்த பேட்டி திங்கட்கிழமை இரவு 9 மணிக்கும், இதன் மறு ஒளிபரப்பு செவ்வாய்கிழமையன்று பிற்பகல் 2 மணிக்கு ஒளிபரப்பாகும் என்று அறிவித்துள்ளது.
தீபா பேட்டி ஒளிபரப்பாகததால் சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்தன. இந்த நிலையில் தீபாவின் பேட்டியை நாளை ஒளிபரப்புகிறது தந்தி டிவி.
இந்த பேட்டியில் போயஸ் தோட்டத்தில் இருந்து வெளியேறியது எப்படி? வளர்ப்பு மகன் திருமணம் பற்றியும், அரசியலுக்கு வருவது பற்றியும் கூறியுள்ளாராம். தீபாவின் பேட்டி பரபரப்பை பற்ற வைக்கப் போவது உறுதி.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications