For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மப்பு தலைக்கேறி நடு ரோட்டில் புரளும் இளைஞர்.. தாராபுரம் மதுக்கடையில் 24 மணி நேரமும் சரக்கு சப்ளை!

தாராபுரம் மதுக்கடையில் 24 மணி நேரமும் மது விற்பனை செய்யப்படுகிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    மப்பு தலைக்கேறி நடு ரோட்டில் புரளும் இளைஞர்.. வீடியோ

    திருப்பூர்: 24 மணி நேரமும் முறைகேடாக இயங்கி கொண்டு வரும் தாராபுரம் மதுபானக்கடையினால், இளைஞர்கள் போதை தலைக்கேறி நடு ரோட்டியிலேயே விழுந்து கிடக்கும் அவலம் அரங்கேறி வருகிறது.

    திருப்பூர் மாவாட்டம் தாராபுரம் பகுதியில் எந்நேரமும் பரபரப்பாக காணப்படும் பகுதி பூக்கடை கார்னர். இந்த பகுதியில் 3438 என்ற டாஸ்மாக் மதுபானக்கடை இயங்கி வருகிறது. தமிழக அரசு அறிவித்துள்ள நேரத்தை தவிர எந்நேரமும் இந்த மதுபானக்கடையில் விற்பனை வெகு ஜோராக நடைபெற்றும் வருகிறது. இந்த மதுபானக்கடையின் வழியாக செல்லும் பொதுமக்கள் முகம் சுளித்தவாறே செல்லும் அவலநிலையும் உள்ளது.

    Tharapuram Tasmac Shop is running 24 hours a day

    இந்த பகுதியானது எந்நேரமும் பரபரப்பாகவே காணப்படும் பகுதி ஆகும். எந்த பகுதியிலும் மதுபானக்கடை இயங்காவிட்டாலும் இந்த மதுபானக்கடை மட்டுமே 24 மணி நேரமும் இயங்கிவருவது தான் குடிமக்களுக்கு வரப்பிரசாதம் ஆகும்.

    இந்த பகுதி வழியாக மருத்துவமனைக்கோ, பள்ளி கூடங்களுக்கோ, அல்லது வழிபட்டு ஸ்தலங்களுக்கோ செல்லுபவர்கள் மூக்கை பிடித்து கொண்டு தான் செல்லவேண்டும். அந்த அளவிற்கு குடிமக்களின் வருகையும் அதிகம். இன்று காலை 11 மணிக்கு பூக்கடை சந்திபில் ஒரு இளைஞர் மது போதை தலைக்கேறி நடுரோட்டில் விழுந்து கிடக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.

    மது நாட்டுக்கும் உயிருக்கும் கேடு என்ற விளம்பரத்தை விதிமுறைகளின் பேரால், வேறு வழியில்லாமல் கட்டி தொங்கவிட்டுவிட்டால் மட்டும் போதுமா? பெயரளவுக்கு இந்த பெயர்பலகையை தொங்கவிட்டு, மதுவிற்பனையை 24 மணி நேரமும் வெகு ஜோராக நடத்தி கொள்வதா? முறைகேடாக நடக்கும் இந்த கடைமீது இதுவரை எவ்வித நடவடிக்கையும் யாரும் எடுப்பது போல தெரியவில்லை. நாளைய உலகம் என்று நம்பக்கூடிய இளைஞர்கள் இப்படி அதிகாலையிலேயே குடித்துவிட்டு நடுரோட்டில் விழுந்து கிடப்பது கண்டு ஆத்திரமும், பரிதாபமும் நமக்கு வந்துபோவதுதான் மிச்சம். யார் எக்கேடு கெட்டால் நமக்கென்ன என்று மது விற்பனை செய்யும் இதுபோன்ற 24 மணி நேர டாஸ்மாக் கடை மீது நடவடிக்கை எடுக்க யாராவது "நிஜமான குடிமகன்கள்" முன்வருவார்களா?

    English summary
    The public is blaming it for 24 hours Tasmac Shop in Tharapuram. The demand has been made to close down the illegal Taskmak shop.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X