அந்த ஒரு கேள்விக்கு மட்டும் பதிலே சொல்லாத ஓ.பன்னீர்செல்வம்!
டிடிவி தினகரனின் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முக்கியமான கேள்வி ஒன்றுக்கு மட்டும் பதில் அளிக்கவில்லை.
Recommended Video

சென்னை: டிடிவி தினகரனின் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முக்கியமான கேள்வி ஒன்றுக்கு மட்டும் பதில் அளிக்கவில்லை.
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தினகரனை சந்திக்கவும், ஆட்சியை கவிழ்க்கவும் திட்டமிட்டார் என்று நேற்று தங்க தமிழ்ச்செல்வன் கூறினார். இதை இன்று காலை டிடிவி தினகரனும் உறுதி செய்தார்.
இந்த நிலையில் இந்த புகார்களுக்கு பதில் அளிக்கும் வகையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்தார்.

குழப்பம்
ஓ.பன்னீர்செல்வம் அதில், நீண்ட நாட்களுக்கு செய்தியாளர்களை சந்திப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. நேற்றில் இருந்து தினகரன் புதிய பிரச்சனையை உருவாக்க முயற்சிக்கிறார். கட்சிக்குள் குழப்பம் ஏற்படுத்துவதுதான் அவரின் நோக்கம்.என்னால் எப்போதும் ஆட்சி கவிழாது. டிடிவிதான் ஆட்சியை கவிழ்க்க முயற்சி செய்கிறார்.

சந்திப்பு
வெறும் 18 பேரை வைத்துக் கொண்டு அரசியல் செய்கிறார். டிடிவி தினகரனை சந்தித்தது உண்மைதான். 2017 ஜூலை 12ல் தினகரனை சந்தித்தேன். அவர் அரசியலில் இருந்து விலகுவதாக கூறினார். அதனால் அரசியல் நாகரீகம் கருதி சந்தித்தேன். இவ்வளவு நாள் இதை சொல்லாமல் இருந்தேன்.

என்ன குற்றச்சாட்டு
ஆனால் நேற்று பேட்டியில் தினகரன் ஆதரவாளர் தங்க தமிழ்செல்வன், டிடிவி தினகரனை சந்திக்க ஓ.பி.எஸ் நேரம் கேட்டு இருந்தார். கடந்த வாரம் தினகரனை சந்திக்க ஓ.பி.எஸ் நேரம் கேட்டார். எடப்பாடி ஆட்சியை கலைப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த முயன்றார். ஆனால் இந்த சந்திப்பு நடக்கவில்லை, என்று கூறவில்லை.

பதில் சொல்லவில்லை
இந்த நிலையில் ஒருவருடம் முன் சந்திப்பு நடந்ததை ஒப்புக்கொண்ட ஓ.பன்னீர்செல்வம், இந்த குற்றச்சாட்டுக்கு பதில் சொல்லவே இல்லை. ஒருவாரம் முன் தினகரனை சந்திக்க அழைப்பு விடுத்தாரா, அப்பாயிண்ட்மெண்ட் கேட்டாரா என்று ஓ.பன்னீர்செல்வம் விளக்கம் அளிக்கவில்லை. இந்த ஒரு கேள்விக்கு மட்டும் இன்னும் பதில் கிடைக்கவில்லை.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications