யாருக்கும் மெஜாரிட்டி இல்லை: அதிமுக 111; திமுக 99, மநகூ 3, பாமக 2, பாஜக 1 - தந்தி டிவி எக்ஸிட் போல்
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்குமே மெஜாரிட்டி கிடைக்காது என்று தந்தி டிவி எக்ஸிட் போல் தெரிவித்துள்ளது. அதிமுக 111, திமுக 99 இடங்களில்தான் வெல்லும்; 16 தொகுதிகளில் இழுபறி என்றும் பெரும்பான்மைக்கு தேவையான 118 இடங்களை இரு கட்சிகளும் பெறவில்லை எனவும் தந்தி டிவி எக்ஸிட் போல் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள 232 சட்டசபை தொகுதிகளுக்கும் நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்குகள் மே 19ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

இந்த நிலையில் தேர்தலுக்குப் பின்பான எக்ஸிட் போல் முடிவுகள் வெளியிடப்பட்டு வருகின்றன. இதுவரையிலான வாக்குப் பதிவுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளான எக்ஸிட் போல் முடிவுகளில் 4 திமுகவுக்கு ஆதரவாகவும் 1 அதிமுகவுக்கு ஆதரவாகவும் வெளியாகி உள்ளன.
தந்தி டிவி தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு நடத்தி அதன் முடிவுகளை நேற்று வெளியிட்டது. அதில்,
அதிமுக - 102
திமுக -79
பாமக - 1
இழுபறி - 52
என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இன்று வாக்குப்பதிவிற்கு பிந்தைய கருத்துக்கணிப்பான எக்ஸிட்போலை தந்தி டிவி வெளியிட்டது. இதில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மைக்குரிய 118 இடங்கள் கிடைக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் இழுபறி நிலையில் உள்ள 16 தொகுதிகளில் கிடைக்கும் வெற்றி வாய்ப்பினை பொறுத்தே யாருக்கு ஆட்சி அமைக்க வாய்ப்பு கிடைக்கும் என்பது தெரியவரும்.
தந்தி டிவி எக்ஸிட் போல் முடிவுகள்:
அதிமுக - 111
திமுக - 99
மக்கள் நலக்கூட்டணி - 3
பாமக - 2
பாஜக - 1
இழுபறி - 16
வெல்லும் வாய்ப்புள்ள தொகுதிகள்
திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் வெல்லும் வாய்ப்புள்ள தொகுதி விவரங்களையும் தந்தி டிவி வெளியிட்டுள்ளது.
வேதாரண்யம் தொகுதியில் பாஜக வெல்ல வாய்ப்பு உள்ளதாகவும், பாமகவிற்கு பென்னகரம், ஆற்காடு தொகுதிகளில் வெல்ல வாய்ப்பு உள்ளதாகவும் தந்தி டிவி வாக்குப்பதிவிற்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தெரிவித்துள்ளது.
தேமுதிக - மக்கள் நலக்கூட்டணி உளுந்தூர்பேட்டை, பவானிசாகர், தளி ஆகிய தொகுதிகளில் வெல்லும் என்றும் இழுபறி நிலையில் 16 தொகுதிகள் உள்ளதாகவும் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications