மநகூ, பாமக, பாஜக வெல்லும் வாய்ப்புள்ள தொகுதிகள் விவரம்- தந்தி டிவி எக்ஸிட் போல்
சென்னை: தந்தி டிவி வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பின் படி, தேமுதிக - ம.ந.கூட்டணிக்கு 3 தொகுதிகளும், பாமகவுக்கு 2 தொகுதியும், பாஜகவுக்கு ஒரு தொகுதியும் வெல்ல வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் 16 தொகுதிகளில் இழுபறி நிலை உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதிகள் தவிர மீதமுள்ள 232 சட்டசபை தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்த நிலையில், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளை நேற்று வெளியிட்டது தந்தி டிவி.

அதன்படி அதிமுக 111, திமுக 99 இடங்களில்தான் வெல்லும்; 16 தொகுதிகளில் இழுபறி என்றும் பெரும்பான்மைக்கு தேவையான 118 இடங்களை இரு கட்சிகளும் பெறவில்லை எனவும் தந்தி டிவி எக்ஸிட் போல் தெரிவித்துள்ளது.
மேலும் வேதாரண்யம் தொகுதியில் பாஜக வெல்ல வாய்ப்பு உள்ளதாகவும், பாமகவிற்கு பென்னாகரம், ஆற்காடு தொகுதிகளில் வெல்ல வாய்ப்பு உள்ளதாகவும் தந்தி டிவி வாக்குப்பதிவிற்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தெரிவித்துள்ளது.
தேமுதிக - மக்கள் நலக்கூட்டணி உளுந்தூர்பேட்டை, பவானிசாகர், தளி ஆகிய தொகுதிகளில் வெல்லும் என்றும் இழுபறி நிலையில் 16 தொகுதிகள் உள்ளதாகவும் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இழுபறி நிலையில் உள்ள தொகுதிகள் விவரம்:
காட்டுமன்னார்கோவில், நாகப்பட்டினம், ஒசூர், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, கம்பம், வந்தவாசி, வேலூர், குடியாத்தம், வானூர், சேலம் வடக்கு, பல்லாவரம், ஆயிரம் விளக்கு, ஆவடி, திரு.வி.க.நகர், குளித்தலை ஆகிய 16 தொகுதிகளில் இழுபறி நிலை காணப்படுவதாக கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications