ஊட்டி லாரன்ஸ் பள்ளியின் 160-வது நிறுவனர் தின விழா.. கடற்படை தளபதி சுனில் லண்பா பங்கேற்பு!
லாரன்ஸ் பள்ளியின் 160-வது நிறுவனர் தின விழா நடைபெற்றது.
ஊட்டி: ஊட்டி லவ்டேல் பகுதியில் உள்ள லாரன்ஸ் பள்ளியின் 160-வது நிறுவனர் தின விழா வெகு கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதில் கடற்படை சீப் கமாண்டர் அட்மீரல் சுனில் லண்பா சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார்.
மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் லாரன்ஸ் பள்ளியின் 160-வது நிறுவனர் தின விழா கடந்த இரு தினங்களாக நடைபெற்றது. பல துறைகள் சார்ந்த கண்காட்சியுடன் இந்த விழா தொடங்கியது.

பள்ளியின் மாணவ தலைவனான நமன் அகர்வால் கட்டளையின் கீழ் ஒரு வலுவான இராணுவ மரபு கொண்ட அணிவகுப்பும் நடைபெற்றது. விழாவின் சிறப்பு விருந்தினரான இந்திய கடற்படை தலைமை தளபதி,அட்மிரல் சுனில் லன்பா, அணிவகுப்பு மரியாதையை ஏற்றார்.
பின்னர் நடைபெற்ற இசைக் குழு மாணவர்கள் ஒன்றிணைந்து செய்த இசை வித்தையானது காண்போரையும் கேட்போரையும் வியக்க வைத்தது. பள்ளி மைதானத்தில் குதிரை சவாரி மற்றும் சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றதுடன், கலையரங்கில் மாணவ- மாணவியரின் கலை நிகழ்ச்சிகளும், நடைபெற்றன. மேலும் மாணவர்களால் உருவாக்கப்பட்ட கைத்தறி ஆடைகள், கைவினைக்கலைகள், சமூகவியல், கணிதம், அறிவியல் மற்றும் கணினி போன்ற பல துறை சார் கண்காட்சிகளும் இடம் பெற்றிருந்தன.

பல்வேறு திறன்களில் சிறந்த மாணவ-மாணவியர்களுக்கு கேடயங்களும் விருதுகளும் பரிசுக்கோப்பைகளும் வழங்கப்பட்டன.இவ்விழாவிற்கு உலகின் பல நாடுகளில் இருந்தும் பெற்றோர்களும், முன்னாள் மாணவர்களும் சிறப்பு அழைப்பாளர்களும் வந்திருந்து சிறப்பித்தனர்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications