மிராசுதாராக பிறந்து பெரம்பலூர் எம்.பி வேட்பாளரான மருதராஜா
பெரம்பலூர்: நாடாளுமன்ற தேர்தலில்பெரம்பலூர் லோக்சபா போட்டியிட அறிவிக்கப்பட்டுள்ள அ.தி.மு.க. வேட்பாளர் ஆர்.பி. மருதைராஜ் என்கிற ஆர்.பி. மருதராஜா (வயது50), பெரம்பலூர் அருகே உள்ள ரங்கநாதபுரத்தை சேர்ந்தவர்.
7.3.1963-ல் பிறந்த ஆர்.பி. மருதராஜாவின் பெற்றோர் எஸ்.பெரியசாமி கமலம். மிராசுதாரான பெரியசாமி மரணமடைந்துவிட்டார்.
ஆர்.பி. மருதராஜா ரங்கநாதபுரம், பாளையம், குரும்பலூர் பகுதிகளில் தொடக்கக்கல்வியும், பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மேல்நிலைக்கல்வியும் பயின்று திருச்சி தேசியக்கல்லூரியில் 1981-1986 வரை எம்.எஸ்.சி. (அப்ளைடு ஜியாலஜி) பட்ட மேற்படிப்பு படித்துள்ளார். இவர் முத்தரையர் சமூகத்தைச் சேர்ந்தவர். 30 ஆண்டுகாலமாக அதிமுகவிலேயே இருக்கிறார்.

ஆர்.பி. மருதராஜாவின் மனைவி ம.கலைச்செல்வி. பி.எஸ்.சி. பட்டதாரி. இவர்களுக்கு பிரசன்னகுமார் (11-ஆம் வகுப்பு) என்ற மகனும், சுவாதிபிரியா (10ஆம் வகுப்பு) மகளும் உள்ளனர்.
மாணவப்பருவத்தில்....
1980-ஆம் ஆண்டில் மாணவப்பருவத்திலேயே அ.தி.மு.க.வில் இணைந்த மருதராஜா, 1986 முதல் 1994 வரை பெரம்பலூர் ஒன்றிய மாணவர் அணி செயலாளராகவும், 1994 முதல் 2006 வரை பெரம்பலூர் ஒன்றிய அ.தி.மு.க. எம்.ஜி.ஆர்.இளைஞர் அணி செயலாளர் ஆகவும் பதவி வகித்துள்ளார்.
ஒன்றியக் கவுன்சிலர்
2004 முதல் பெரம்பலூர் ஒன்றிய கழக செயலாளராக பொறுப்பில் உள்ள மருதராஜா, 2011-ல் நடந்த உள்ளாட்சி மன்றத்தேர்தலில் ஒன்றிய கவுன்சிலராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டு, பெரம்பலூர் ஒன்றியக்குழுத்தலைவராக பதவிவகித்துவருகிறார்.
விவசாயக்குடும்பம்
விவசாயத்தில் ஈடுபட்டுவந்தாலும், முழுநேரமும் கட்சிப்பணிக்காக தன்னை ஈடுபடுத்திக்கொண்டவர். கட்சித்தலைமை அறிவிக்கும் நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்தி காட்டும் திறமைபெற்றவர் என்ற பெயர் அதிமுகவினரிடையே உள்ளது.
பெரம்பலூர் கல்யாண் நகரில் குடும்பத்துடன் வசித்துவரும் ஆர்.பி. மருதராஜா, கட்சியின் சக தொண்டர்களுடன் அன்பாக பழகக்கூடியவர் என்ற நற்பெயரும் உள்ளது. இதனால் வெற்றி வாய்ப்பும் அதிகம் என்கின்றனர் அதிமுகவினர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications