பிளாஷ்பேக் 2014: மங்கள்யான் முதல் செல்பி ஸ்டிக் வரை இந்த வருட அறிவியலின் சிறந்த கண்டுபிடிப்புகள்
சென்னை: தத்தித் தத்தி, தவழ்ந்து நடைபயின்று 2014 ஆம் ஆண்டு ஒருவழியாக தன்னுடைய பயணத்தினை முடித்துக் கொண்டுள்ளது.
நாளை பிறக்கப்போகும் புத்தம் புது ஆண்டில் விஞ்ஞானத்துறையினை மேலும் வளர்ச்சியின் உச்சத்திற்கு கொண்டு செல்லும் வகையில் அமைந்துள்ளன 2014 ஆம் ஆண்டின் சில தலைசிறந்த அறிவியல் கண்டுபிடிப்புகள்.
இந்த கண்டுபிடிப்புகளின் வரிசையில் மங்கள்யான் வெற்றியால் இந்தியாவும் பெருமைமிகு இடத்தைப் பெற்றுள்ளது இந்த வருடத்தில்.

மார்ஸை முத்தமிட்ட மங்கள்யான்:
இந்தியாவில் அறிவியல் தயாரிப்புகளிலேயே 450 கோடி ரூபாய் என்ற குறைந்த செலவில் தயாரிக்கப்பட்டு செவ்வாய்க்கு அனுப்பப்பட்ட மங்கள்யான் இந்த ஆண்டின் சிறந்த தொழில்நுட்ப கண்டுபிடிப்பாக கருதப்படுகிறது.

திரைப்படத்தை விடக் கம்மி:
ஒரு ஆங்கில திரைப்படத்தை தயாரிக்க ஆகும் செலவை விட, குறைந்த செலவில் இஸ்ரோவால் இது தயாரிக்கப்பட்டது. விண்ணில் செலுத்தப்பட்டு செப்டம்பர் 24 ஆம் தேதியன்று செவ்வாய் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.

வெற்றி பெற்ற இந்தியா:
இதன்மூலம் செவ்வாய் கிரகத்துக்கு விண்கலம் அனுப்பும் முதல் முயற்சிலேயே வெற்றி பெற்ற நாடு எனும் பெருமையை இந்தியா பெற்றது. செவ்வாயில் ஆராய்ச்சி மேற்கொள்ளும் விதமாக ஐந்து உபகரணங்கள் இதில் பொருத்தப்பட்டுள்ளன.

கோபன்ஹேகன் வீல்:
50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பேட்டரி மூலம் செயல்படும் இச் சைக்கிள் சக்கரத்தில் ஸ்மார்ட்போன் அப்ளிகேஷன் உள்ளது. இதிலுள்ள சென்சார் மூலம் சாலையின் தன்மை, காற்று வீசும் திசை, வெப்பநிலை போன்றவற்றை தெரிந்து கொள்ளலாம்.

சைக்கிள் இனி தேவை:
பாதையை காட்டும் வழிகாட்டியும் இதில் உள்ளது. சைக்கிள் உபயோகத்தை ஊக்குவிக்கும் வகையில் இந்த கோபன்ஹேகன் வீல் தயாரிக்கப்பட்டுள்ளது.

ஒட்டுக்கேட்க இனி முடியாது:
மொபைலில் தகவல்கள் திருடப்படாமல் பாதுகாப்பாக இருக்க விரும்புபவர்களுக்காக தயாரிக்கப்பட்டதுதான் "பிளாக் போன்". போன் ஒட்டுக்கேட்பு, தகவல்கள் திருடல் போன்றவற்றை தடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பிளாக் போனின் வடிவமைப்பு:
உளவுப் பிரச்னைகளில் சிக்காமல் இருக்க அமெரிக்கர்கள் பாதுகாப்பான போனை விரும்புகின்றனர். அவர்களை கருத்தில் கொண்டு இந்த போன் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் விலை ரூபாய் 40 ஆயிரம்.

மிதக்கும் ஹோவர் போர்ட்:
ஹாலிவுட் திரைப்படங்களில் கற்பனையில் உருவாக்கப்பட்ட ஹோவர் போர்ட் தற்போது நிஜத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. தரையிலிருந்து சில அங்குலம் உயரத்தில் மிதந்து இதில் பயணம் செய்யலாம்.

நிலநடுக்கத்தில் பாதுகாப்பு:
இதன் பேட்டரி 15 நிமிடங்கள் மட்டுமே நீடிக்கும். பேட்டரியின் ஆயுட்காலத்தை அதிகரிக்கும் ஆய்வுகள் நடந்து வருகின்றன. நிலநடுக்கத்தின் போதும் மிதந்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இதன் விலை ரூபாய் 6,32,700.

ஆப்பிள் கியர் வாட்ச்:
ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள கைக்கடிகாரத்தை மொபைல், கம்ப்யூட்டர் போல பயன்படுத்தலாம். இதன்மூலம் மொபைல், இன்டர்நெட் பார்க்கும் நேரத்தை மிச்சப்படுத்தலாம்.

கவர்ச்சியான கைக்கடிக்காரம்:
இதை மணிக்கட்டில் கட்டிக்கொள்வதன் மூலம் உடலின் வெப்பநிலை, தன்மை போன்றவற்றை அறியலாம். பயணத்தின் போது திசைகாட்டியாகவும் பயன்படுகிறது. கவர்ச்சிகரமான மாடல்களில், 18 காரட் தங்கம் கொண்டும் தயாரிக்கப்படுகிறது. இதன் ஆரம்ப விலை ரூபாய் 22 ஆயிரம்.

மைக்ரோசாப்ட் சர்பேஸ் ப்ரோ 3:
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் புதிய சர்பேஸ் ப்ரோ 3 டேப்லட் மக்களிடையே சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது. 12 அங்குல அளவு கொண்ட இதை லேப்டாப் போலவே கீபோர்டை இணைத்து பயன்படுத்தலாம்.

கையாள்வது “ஈஸி”:
எளிதில் எடுத்து செல்ல முடியும் என்பதால் பொறியாளர்கள் மற்றும் வர்த்தகர்களுக்கு இந்த டேப்லட் பெரிதும் பயன்படுகின்ற இதன் விலை 50 ஆயிரம் ரூபாய் ஆகும்.

ஹீமோபியூரிபையர்:
எபோலாவிற்கு எதிரான போராட்டத்தில் முதன்மை கண்டுபிடிப்பு இந்த ஹீமோபியூரிபையர். எபோலா வைரஸினை ரத்ததில் இருந்து பிரித்தெடுக்கும் திறன் பெற்றது இந்த பியூரிபையர். இதனுடைய சோதனையில் சிறப்பாக செயல்பட்ட இந்த பியூரிபையர் மீதான அடுத்தக்கட்ட சோதனைகள் நடைபெற்றுவருகின்றது.

”செல்பி புள்ள” செல்பி ஸ்டிக்:
2013 ஆம் ஆண்டில் பிரபலமான செல்பியினை இன்னும் பிரபலமாக்கிய "செல்பி ஸ்டிக்" 2014 ஆம் ஆண்டில்தான் கண்டறியப்பட்டது.

சூடு பிடித்த செல்பி ஸ்டிக் விற்பனை:
பிரபலங்களைக் கூட விடாமல் துரத்திய இந்த செல்பி பீவருக்கு இன்னும் சூடு சேர்த்தது இந்த செல்பி ஸ்டிக். இதில் செல்போனை பொருத்தி நீட்டி எத்தனை பேர் வேண்டுமானாலும் செல்பி எடுத்துக் கொள்ளலாம்.
-
"அப்படியே ஓடிடுங்க.." தங்கம் அவுட், கேஷ் இன்.! ஆனந்த் சீனிவாசன் சொன்ன மேட்டர் இதுதான் -
சவுதிக்கு விழுந்த அடி! ஹார்முஸ் ஜலசந்திக்கு பதில் செங்கடல்.. அடிமடியில் கைவைத்த ஈரானால் ரூட் மாற்றம் -
தேனியில் ஓ பன்னீர்செல்வம் நினைத்தே பார்க்காதது.. கூண்டோடு விலகிய ஆதரவாளர்கள் எடுத்த முடிவு -
மீடியாவில் பேசாதீங்க.. தடுக்கப்படும் சங்கீதா.. விஜய் தரப்பில் 'மூவ்'? கோடிகளில் எகிறும் சமாதான தூது? -
இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் விநியோகம் செய்ய தயார்.. போர் பதற்றத்துக்கு மத்தியில் ரஷ்யா அறிவிப்பு! -
உறுதியான காங்கிரஸ் திமுக கூட்டணி! அறிவாலய அலார்ம்! சத்தியமூர்த்தி பவன் சரண்டர்! அதிகாலை முடிந்த டீல் -
பிரபல ஐடி நிறுவனத்தில் வேலை செய்யாத மேனேஜர்களுக்கு கோடிகளில் போனஸ்.. 173 கோடி சம்பளம் வாங்கும் சிஇஓ -
ஈரானை தாக்க.. இந்திய துறைமுகத்தை பயன்படுத்தியதா அமெரிக்கா? மத்திய அரசு மறுப்பு -
5 ஸ்டார் ஹோட்டல் மாதிரி சில்லென்ற சொகுசு: சென்னை டூ நெல்லை ரயில் பயணிகளுக்கு ரூ.25ல் பெரிய சர்ப்ரைஸ் -
அபிஷேக் சர்மா அவுட்.. ரிங்கு சிங் இன்.. அரையிறுதியில் மொத்தமாக மாறப்போகும் இந்திய பிளேயிங் லெவன்? -
ஒவ்வொன்றும் ஒரு வெடி குண்டுக்கு சமம்.. சங்கீதா கையில் அந்த வீடியோ ஆதாரம்.. வசமாக சிக்கும் விஜய்! -
இத்தோடு விஜய் அரசியல் முடியனும்.. திமுக தீவிரம்.. காங்கிரசிடம் இறங்கிப் போய் கூட்டணி வைத்த ரகசியம்












Click it and Unblock the Notifications