அம்மா வாங்க, அய்யா வாங்க.. 2 கூடை ஆதரவு வாங்கிக்கிட்டு போங்க: இது அழகிரி!
தேனி: மதிமுகவில் இருந்த பொன். முத்துராமலிங்கத்தை திமுகவுக்கு மீண்டும் அழைத்து வந்தது தான் நான் செய்த மிகப் பெரிய தவறு என்று மு.க. அழகிரி தெரிவித்துள்ளார்.
கம்பத்தில் நடந்த திமுக நிர்வாகி இல்ல விழாவில் அழகிரி கலந்து கொண்டார். அப்போது அவரை காங்கிரஸ் வேட்பாளர் ஜே.எம். ஆரூண் மற்றும் மதிமுக வேட்பாளர் அழகு சுந்தரம் ஆகியோர் சந்தித்து ஆதரவு கோரினார்கள். இருவருக்குமே ஆதரவு தெரிவித்தார். அழகிரி. பின்னர் நிகழ்ச்சியில் அவர் பேசுகையில்,

வைகோ
தேனி மக்களுக்காக வைகோ பாடுபட்டுள்ளார். பெரியாறு அணை விவகாரத்தில் அவர் பல்வேறு போராட்டங்கள் நடத்தினார். அதை எல்லாம் நம்பித் தான் மதிமுக தேனி தொகுதியில் போட்டியிடுகிறது.

ஆரூண்
ஜே.எம். ஆரூண் எம்.பி. இந்த தொகுதியில் இருந்து 2 முறை தேர்வு செய்யப்பட்டவர். இந்த தொகுதிக்காக சேவைகள் செய்துள்ளதால் அவர் மீண்டும் இதே தொகுதியில் போட்டியிடுகிறார்.

திமுக
திமுக வேட்பாளர் பொன். முத்துராமலிங்கம் ஏன் இந்த தொகுதியில் போட்டியிடுகிறார்? அவருக்கு போட்டியிட என்ன தகுதி இருக்கிறது. அவருக்குள்ள ஒரேயொரு தகுதி, செய்த சாதனை கட்சி விட்டு கட்சி தாவுவது தான்.

பெரிய தவறு
நான் செய்த மிகப் பெரிய தவறு என்னவென்றால் மதிமுகவில் இருந்த பொன். முத்துராமலிங்கத்தை மீண்டும் திமுகவுக்கு அழைத்து வந்தது தான்.

மதிமுக
வைகோ திமுகவில் இருந்து வெளியேற முக்கிய காரணமே பொன். முத்துராமலிங்கம் தான். வைகோவை ஏற்றிவிட்டு ஏற்றிவிட்டே அவரை தனிக்கட்சி துவங்க வைத்தார். பின்னர் வைகோவுக்கும் துரோகம் செய்து திமுகவில் சேர்ந்துவிட்டார் என்றார்.
-
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ!












Click it and Unblock the Notifications