மாமா விட்டுவிடுங்கள் என கெஞ்சினான், ஆனாலும் தீர்த்துக்கட்டினேன்:சிறுவன் கொலையில் கள்ளக்காதலன் பகீர்
மாமா விட்டுவிடுங்கள் என ரித்திஷ் கெஞ்சினான் ஆனாலும் இரும்புக்கம்பியால் அடித்து தீர்த்துக்கட்டினேன் என கள்ளக்காதலன் பகீர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
Recommended Video

சென்னை: மாமா விட்டுவிடுங்கள் என ரித்திஷ் கெஞ்சினான் ஆனாலும் இரும்புக்கம்பியால் அடித்து தீர்த்துக்கட்டினேன் என கள்ளக்காதலன் பகீர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
சென்னை நெசப்பாக்கம் எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவரின் மனைவி மஞ்சுளா. இந்த தம்பதிக்கு ரித்தீஷ் சாய் என்ற 9 வயது மகன் இருந்தான்.
மின்வாரியத்தில் பொறியாளராக பணிபுரிந்து வரும் மஞ்சுளாவுக்கு சேலையூரைச் சேர்ந்த நாகராஜ் என்பவருடன் கள்ளக்காதல் இருந்துவந்துள்ளது. இவர்கள் இருவரும் பலமுறை தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர்.

கணவர் இல்லாத நேரத்தில்
கணவர் கார்த்திகேயன் இல்லாத நேரத்தில் மஞ்சுளா கள்ளக்காதலன் நாகராஜை வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். இருவரின் தனிமை சந்திப்பு குறித்து ரித்திஷ் தனது தந்தையிடம் கூறியுள்ளார்.

கள்ளக்காதலை மறுப்பு
இதனையறிந்த கார்த்திகேயன் இருவரையும் கண்டித்துள்ளார். ஆனாலும் அவர்கள் கள்ளக்காதலை விட மறுத்து உறவை மேற்கொண்டுள்ளனர்.

சிறையில் அடைப்பு
இந்நிலையில் நாகராஜ் குறித்து கார்த்திகேயன் கடந்த ஜனவரி மாதம் எம்ஜிஆர் நகர் போலீஸில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து போலீசார் அவரை சிறையில் அடைத்தனர்.

பொய் சொல்லி கடத்தல்
பின்னர் வெளியே வந்த நாகராஜ் தன்னை ஜெயிலுக்கு அனுப்பிய கார்த்திகேயனை பழிவாங்க திட்டமிட்டார். அதன்படி நேற்று முன்தினம் இரவு டியூஷனில் இருந்த ரித்திஷை, மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டும் எனக்கூறி கடத்தி சென்றுள்ளார் நாகராஜ்.

சிறுவனை கொன்றது எப்படி?
சேலையூரில் உள்ள தனது வீட்டில் வைத்து சிறுவன் ரித்தீஷை மிக கொடூரமாக அவர் கொலை செய்துள்ளார். இந்நிலையில் நேற்று கைது செய்யப்பட்ட நாகராஜிடம் போலீசார் நடத்திய விசாரணையில் சிறுவனை கொன்றது எப்படி என விவரித்துள்ளார்.

பீர்பாட்டிலால் கழுத்து அறுப்பு
அதாவது ரித்தீஷை எப்படி கொலை செய்யலாம்? என்று யோசித்ததாகவும், அதன்படி காலியாக இருந்த பீர் பாட்டிலை உடைத்து ரித்தீஷை கீழே தள்ளி, அவனது கழுத்தை அறுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

மாமா விட்டுவிடுங்கள்
கழுத்து அறுபடவில்லை என்ற அவர், அப்போது ரித்தீஷ் மாமா.. மாமா, ‘என்னை விட்டுவிடுங்கள்' என்று கெஞ்சியதாகவும் தெரிவித்துள்ளார். ஆனாலும் தான் அவனை விடவில்லை என்றும் அருகில் கிடந்த இரும்பு கம்பியால் அவனது தலையில் ஓங்கி அடித்து தீர்த்து கட்டிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

தாயின் கள்ளக்காதல்
மாமா விட்டுவிடுங்கள் என கெஞ்சிய சிறுவனை துடிக்க துடிக்க கொன்றதாக நாகராஜ் அளித்துள்ள வாக்குமூலம் போலீசாரை அதிர வைத்துள்ளது. தாயின் கள்ளக்காதலுக்கு 9 வயது மகன் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications