திருமணமான ஒரே நாளில் புதுப்பெண் மீனா தூக்கிட்டு தற்கொலை-வாணியம்பாடியில் சோகம்
திருமணமான ஒரே நாளில் புதுப்பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார்.
Recommended Video

வாணியம்பாடி: திருமணமான மறுநாளே புதுப்பெண் மீனா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வாணியம்பாடி நேதாஜி நகர் மருத்துவர் காலனியை சேர்ந்தவர் விநாயகம் என்பவரது மகள் மீனா, 20. இவருக்கும், குரிசிலாப்பட்டை சேர்ந்த நாதஸ்வர கலைஞர் கோவிந்தராஜ் 25 என்பவருக்கும் நேற்று முன்தினம் சிறப்பாக திருமணம் நடைபெற்றது. அத்துடன் சம்பிரதாயப்படி, தம்பதிகள் மணமகள் வீட்டிற்கும் அழைத்து வரப்பட்டனர்.

இந்நிலையில், மாப்பிள்ளை கோவிந்தராஜ் நேற்று மாலை வேலை காரணமாக வெளியில் சென்றுவிட்டார். அந்த நேரத்தில் மணப்பெண் மீனா அதே பகுதியில் உள்ள உறவினர் யுவராஜ் என்பவர் வீட்டிற்கு சென்றதாக கூறப்படுகிறது. ஆனால் அங்கு யாரும் இல்லை என தெரிகிறது.
அப்போது மீனா திடீரென்று, யுவராஜ் வீட்டிலேயே தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார்.இந்த நேரத்தில் குடும்பத்தினர் மீனாவை தேடி வந்தநிலையில், யுவராஜ் வீட்டில் தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து வாணியம்பாடி போலீசார் விரைந்து வந்து
மீனாவின் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். திருமணமான ஒரே நாளில் ஏன் மீனா தற்கொலை செய்துகொண்டார்? இந்த திருமணத்தில் அவருக்கு உடன்பாடு இல்லையா? வேறு யாரையாவது மீனா விரும்பினாரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். எனினும் திருமணமாகி ஒரே நாளில் 20 வயது இளம்பெண் இறந்த சம்பவம் வேலூர் மக்களிடையே பெரும் அதிர்ச்சி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications