காவிரி விவகாரம்: திருச்சியிலிருந்து கல்லணைக்கு கிறிஸ்தவ அமைப்பினரின் மோட்டார் சைக்கிள் ஊர்வலம்
கிறிஸ்தவ அமைப்பினர் திருச்சியில் மோட்டார் சைக்கிள் ஊர்வலம் மேற்கொண்டனர்.
திருச்சி: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி திருச்சியில் இருந்து கல்லணைக்கு கிறிஸ்தவ அமைப்பினர் மோட்டார் சைக்கிளில் ஊர்வலமாக சென்றனர். இந்த ஊர்வலத்தை அய்யாக்கண்ணு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி கிறிஸ்தவ அமைப்புகள் சார்பில் திருச்சியில் இருந்து கல்லணைக்கு மோட்டார் சைக்கிள் ஊர்வலம் நடைபெற்றது.

திருச்சி மேலப்புதூரில் உள்ள தூய மரியன்னை பேராலயத்தில் இருந்து புறப்பட்ட இந்த மோட்டார் சைக்கிள் ஊர்வலத்தை தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
தொடக்க நிகழ்ச்சியில் திருச்சி பிஷப் அந்தோணிடிவோட்டா, பங்கு தந்தைகள், கிறிஸ்தவ அமைப்பினர், இளைஞர்கள், விவசாயிகள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.
ஊர்வலத்தில் சென்றவர்கள் தங்கள் வாகனங்களில் 'காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திடு' என்ற வாசகம் எழுதப்பட்ட கொடியை வைத்து கொண்டு சென்றனர். ஊர்வலம் மேலப்புதூரில் இருந்து டி.வி.எஸ்.டோல்கேட், பழைய பால்பண்ணை, அரியமங்கலம், காட்டூர், திருவெறும்பூர், வேங்கூர் வழியாக கல்லணையை சென்றடைந்தது.
ஊர்வலத்தில் சென்ற இளைஞர்கள் வழிநெடுக பொதுமக்களிடம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டியதன் அவசியத்தையும், இந்த போராட்டத்துக்கு ஆதரவு தர வேண்டும் என்றும் வலியுறுத்தி சென்றனர்.
-
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications