Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மசாஜ் சென்டர் பெயரில் கசமுசா.. கோவையில் விபசார கும்பல் அதிரடி கைது

Subscribe to Oneindia Tamil

கோவை: மசாஜ் மையம் என்ற பெயரில் விபசாரம் நடத்தி வந்த கும்பல் கோவையில் கைது செய்யப்பட்டுள்ளது.

கோவை பீளமேட்டில் உள்ள காளப்பட்டி செல்லும் சாலையில் இருக்கும் நேரு நகரிலுள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் விபசாரம் கொடி கட்டி பறப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

The Coimbatore city police have busted a sex racket

இரவில் கார் மற்றும் பைக்குகளில் பலர் அந்த குடியிருப்புக்கு வந்து செல்வதாக பீளமேடு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து குறிப்பிட்ட அடுக்குமாடிக் குடியிருப்பை போலீசார் ரகசியமாக கண்காணித்து வந்தனர். அப்போது, அந்தக் குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில் 'ஆயுர்வேதிக் மசாஜ்' என்ற பெயரில், பல பெண்களை வைத்து விபசாரம் நடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

தகவலை உறுதி செய்து கொண்ட போலீசார் அதிரடியகாக மசாஜ் மையத்திற்குள் நுழைந்தனர். திண்டுக்கல்லைச் சேர்ந்த சலீம்மாலிக் (30), மதுரையைச் சேர்ந்த பவுன்ராஜ் (30) மற்றும் டெல்லியைச் சேர்ந்த நதின் முகர்ஜி (28) என்ற பெண் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

கடந்த 15 நாட்களுக்கு முன், சலீம் மற்றும் பவுன்ராஜ் ஆகியோர் ஆயுர்வேதிக் சிகிச்சை அளிப்பதாக சொல்லி மாதம், ரூ.15ஆயிரத்திற்கு வீட்டை வாடகைக்கு எடுத்தது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப் பதிவு செ்த போலீசார் இருவரையும் கைது செய்தனர்.

விபசார விடுதியிலிருந்து மீட்கப்பட்ட டெல்லியைச் சேர்ந்த பெண் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+