கிருஷ்ணகிரி: 3-வது மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற கல்லூரி மாணவர் - தலையில் படுகாயம்
கிருஷ்ணகிரியில் மாணவர் ஒருவர் கல்லூரி மாடியிலிருந்து குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் மாணவர் ஒருவர் கல்லூரியின் 3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் மாணவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி அடுத்த அச்சமங்கலம் என்ற இடத்தில் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி உள்ளது பி.எஸ்.வி பாலிடெக்னிக் கல்லூரி. இந்த கல்லூரியில் வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த ஆதியூர் கிராமத்தை சேர்ந்த ராகுல் என்ற மாணவன் மூன்றாம் ஆண்டு டிப்ளோமா மெக்கானிக்கல் படித்து வருகிறார்.

இந்த நிலையில் இன்று காலை கல்லூரிக்கு வந்த ராகுல், கல்லூரியின் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து திடீரென்று தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். மூன்றாவது மாடியில் குதித்ததால் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதனை அடுத்து சக மாணவர்கள் காயமைந்த ராகுலை கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
மாணவனின் தற்கொலை முயற்சியால் கல்லூரி வளாகமே பரபரப்படைந்தது. இதனை அடுத்து கல்லூரிக்கு வரும் ஞாயிற்றுக் கிழமை வரை 6 நாட்கள் விடுமுறை அளித்து கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டு உள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக கந்திகுப்பம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்?












Click it and Unblock the Notifications