For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னை, மணலி அருகே மின் விசிறியில் தூக்கிட்டு தம்பதி தற்கொலை.. 2 நாட்களுக்கு பிறகு உடல் மீட்பு

மணலி அருகே தம்பதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

Google Oneindia Tamil News

Recommended Video

    மணலி அருகே மின் விசிறியில் தூக்கிட்டு தம்பதி தற்கொலை- வீடியோ

    சென்னை: சென்னை மணலியில் தம்பதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    மணலி புதுநகர் சாமியார் மடத்தை சேர்ந்தவர் ஹரி 50. கார்பெண்டராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி நிர்மலா 46. இவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர். அவர்கள் இருவருக்குமே திருமணமாகிவிட்டது.

    The couple committed suicide near Manali in Chennai

    கடந்த சில மாதங்களாக நிர்மலாவுக்கு மனநலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்திருக்கிறார்.

    ஆனால் நிர்மலாவின் உடல்நிலையில் எந்தவித முன்னேற்றமும் காணப்படவில்லை என தெரிகிறது. இதனால், கணவர் ஹரி மன வருத்தத்துடனே இருந்துள்ளார்.

    இந்நிலையில், நேற்றிரவு ஹரியின் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர், மணலி புதுநகர் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.

    போலீசார் விரைந்து வந்து உள்பக்கம் பூட்டிக் கிடந்த கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றனர். அப்போது மின்விசிறியில் கணவன் மனைவி இருவரும் தூக்கில் தொங்கிக் கொண்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

    போலீசார் தம்பதி உடலை கைப்பற்றி ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலை செய்து கொண்ட இருவரும் இரண்டு நாட்களுக்கு முன் இறந்திருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.

    English summary
    Husband and wife committed suicide near Manali. Husband has been mentally ill and he is said to have been frustrated because his wife was not treated. The two have reportedly committed suicide two days ago. Police seized the bodies and registered the case and are investigating the case.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X