ஸ்டாலின் கைது எதிரொலி: தமிழகம் முழுவதும் திமுகவினர் சாலை மறியல் போராட்டத்தால் பரபரப்பு

மு.க.ஸ்டாலின் கைது கண்டித்து திமுகவினர் தமிழகம் முழுவதும் சாமைறியலில் ஈடுபட்டுள்ளனர்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கைதினை கண்டித்து தமிழகம் முழுவதும் திமுகவினர் மறியலில் ஈடுபட்டுள்ளனர். நெல்லையில் திமுக எம்பி கனிமொழி சாலை மறியலில் ஈடுபட்டு வருகிறார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு காலம் தாழ்த்தி வரும் நிலையில் பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்புகள் மற்றம் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.,

The DMK stir throughout Tamilnadu

இந்நிலையில் திமுக செயல்தலைவரும், எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், தலைமையில் இன்று காலை அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், காவிரி விவகாரம், நியூட்ரினோ ஆய்வு மற்றும் மித்தேன் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டுது. இதில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, கம்யூனிஸ்ட், மற்றும் திராவிடர் கழகம் உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்றன.

இதனைதொடர்ந்து மு.க.ஸ்டாலின் தலைமையிலான அனைத்து கட்சி போராட்டம் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்றது-

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், வருகிற 5-ம் ததி முழு அடைப்பு போராட்டம் நடத்துவதாக அறிவித்தார். காவிரி மேலாண்மைவாரியம் அமைக்கும்வரை எங்களை கைது செய்தாலும் தொடர்ந்து போராட்டம் நடத்துவோம் என்றும் கூறினார்.

இதையடுத்து அங்கு வந்த காவல்துறை போராட்டத்தில் ஈடுபட்ட முஸ்.டாலின், திருமாவளன், திருநாவுக்கரசர், முத்தரசன், கி.வீரமணி, உதயநிதி உள்ளிட்டோரை கைது செய்தனர்.

இந்த கைதினை கண்டித்து திமுகவினர் அங்கேயே சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது பெரும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதேபோல, நெல்லையில் திமுக எம்பி கனிமொழி சாலை மறியலில் ஈடுபட்டு வருகிறார். நெல்லை சந்திப்பு அண்ணா சிலை முன்பு இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது.

தஞ்சை பழைய பேருந்த நிலையம் முன்பு 100-க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுப்பட்டுள்ளனர். எதிர்க்கட்சித் தலைவர்கள் கைதுசெய்யப்பட்டதையடுத்து கும்பகோணத்தில் திமுகவினர் சாலை மறியல் ஈடுப்பட்டனர். நெல்லை, திருவாரூர், விழுப்புரத்தில் மறியலில் ஈடுப்பட்ட திமுகவினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேபோல, ஸ்டாலின் கைதினை கண்டித்து தமிழகம் முழுவதும் திமுகவினர் சாலைமறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் போக்குவரத்து வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+