சென்னையில் மின்கம்பி அறுந்து விழுந்ததால் மின்சார ரயில் சேவை பாதிப்பு.. பயணிகள் அவதி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இரும்புலியூரில் உயரழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் எழும்பூரில் இருந்து மேல்மருவத்தூர் சென்ற மின்சார ரயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது.

சென்னை எழும்பூரில் இருந்து மேல்வருத்தூருக்கு மின்சார ரயில் புறப்பட்டது. இரும்புலியூர் அருகே சென்றபோது உயரழுத்த மின்கம்பம் வெடித்து மின்கம்பி அறுந்து விழுந்தது.

The electric train has stopped at Irumbuliyur due to the falling of the electric power line

இதனால் ரயில் நடுவழியில் நிறுத்தப்பட்டுள்ளது. மின்கம்பியை சீர்செய்ய 2 மணி நேரம் ஆகும் என்பதால் அதில் பயணம் செய்த பயணிகள் 400க்கும் மேற்பட்டோர் ஆட்டோ மற்றும் பேருந்து பிடித்து செல்கின்றனர்.

அவ்வழியில் செல்லும் ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளன. மின்சார கம்பி அறுந்து விழுந்ததால் ரயில்சேவை பாதிக்கப்பட்டுள்ளது

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
The electric train has stopped at Irumbuliyur due to the falling of the electric power line. Passengers facing problem to reach their designation.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற