Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தன் மகளின் எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சைக்காக போராடி வரும் இந்த மீனவ தந்தைக்கு உதவுங்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தன் மகளின் எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சைக்காக போராடி வரும் இந்த மீனவ தந்தைக்கு உதவுங்கள்

இரண்டு வருடங்களுக்கு முன்பு வரை தற்கொலை ஒன்று தான் எங்களுக்கு தீர்வாக இருந்தது. ஒவ்வொரு நாளும் எங்கள் மனதில் ஏற்பட்ட வலியை வெறும் வார்த்தைகளால் சொல்ல முடியாது. என் செல்ல மகளின் உயிரைக் காப்பாற்ற போதிய பணம் இல்லாமல் தவித்துக் கொண்டு இருக்கிறோம். கண்ணீர் மட்டும் தான் எங்கள் கையில் உள்ளது. எதை நினைத்து அழுவது என்றே தெரியவில்லை. எல்லோரிடமும் பணம் கேட்டு அலைந்தோம் யாராவது உதவி செய்ய மாட்டார்களா எப்படியாவது என் மகளை காப்பாற்றி விட மாட்டோமா என்று ஏங்காத நாளில்லை. அவள் கூட " ஏம்மா எல்லார்கிட்டேயும் போய் பணம் கேட்டு நிற்கீங்க? இது பார்ப்பதற்கு நல்லா இல்லம்மா" என்று என்னிடம் கூறியுள்ளாள். அவளிடம் எப்படி சொல்வேன் நீ எங்களுடன் இருக்க இந்த பணம் மிகவும் முக்கியம், உன் உயிரை காப்பாற்ற இது எங்களுக்கு தேவை என்பதை அவளிடம் எப்படி என்னால் கூற முடியும்?.

அவளுக்கு நோய் பாதிப்பு இருப்பது தெரிந்ததும் நாங்கள் பட்ட வேதனை அளவிட முடியாதது. அப்படியே நொறுங்கிப் போய்விட்டோம். என் மகள் தலசீமியா என்ற நோயால் பாதிக்கப்பட்டு உள்ளாள். உயிரைக் காப்பாற்ற உடனடியாக எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருக்கிறது என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர். இதற்கு 9,40,000 ரூபாய் வரை தேவைப்படுகிறது.

ஒரு உதவியற்ற தாயாக என் மகளைக் காப்பாற்ற ஒவ்வொரு நாளும் துன்புற்று வருகிறேன். என் பெயர் முத்துவள்ளி, எனக்கு 6 வயதில் வினிஸ்ரீ என்ற மகள் இருக்கிறாள். அவள் பிறந்த மூன்று மாதங்களிலேயே தலசீமியா என்ற நோயால் பாதிக்கப்பட்டு வந்தாள். சில நேரங்களில் உடம்பு ரொம்ப வெப்பமாகக் கொதிக்கும், இல்லையென்றால் ரொம்ப குளிர்ந்த நிலையில் இருப்பாள். நாங்கள் உடனே காரைக்காலில் அருகில் உள்ள மருத்துவரிடம் அழைத்து சென்றோம். அப்போதிலிருந்து காரைக்கால், பாண்டிச்சேரி, இறுதியில் சென்னை என்று மூன்றுக்கு மேற்பட்ட மருத்துவமனைக்கு அலைந்து திரிந்தோம். அவள் பிறந்த மூன்று மாதத்திலிருந்து ஒவ்வொரு மாதமும் மருத்துவமனைக்குச் சென்று இரத்த மாற்று முறையை செய்து வருகிறோம். தற்போது அவளுக்கு சென்னையில் உள்ள VHS மருத்துவமனையில் இரத்த மாற்று முறை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால் இது மட்டும் அவள் உயிரைக் காப்பாற்றாது. அவளுக்கு உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் இருப்பதால் உடனடியாக எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றால், சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவ மனையில் சிகிச்சை பெற வேண்டும்.

எனது கணவர், அன்பழகன். அவர் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். அவருடைய மாத வருமானம் வெறும் 4000 ரூபாய் மட்டுமே. அது குடும்ப செலவுக்கே சரியாகி போகி விடும்.விலை உயர்ந்த பொருள் என்று எங்களிடம் எதுவும் இல்லை. ஒரு அன்றாட வாழ்வை மட்டுமே நடத்தி வருகிறோம். என் மகள் வினிஸ்ரீ அரசு பள்ளியில் தான் 1 ஆம் வகுப்பும் படித்து வருகிறாள். இப்படி இருக்கும் எங்களுக்கு 9,40000 என்பது பெரிய தொகை. இதை பிரட்டுவது என்பது கடினமான விஷயமும் கூட. இருப்பினும் எங்கள் மகளின் உயிரைக் காப்பாற்ற நாங்கள் போராடி வருகிறோம். எவ்வளவு சீக்கிரம் இந்த தொகையைத் திரட்ட முடியுமோ அவ்வளவு சீக்கிரம் எங்கள் மகள் எங்களுக்குக் கிடைப்பாள். ஆறு வருடங்களாக ஒவ்வொரு நாளும் அவளைக் காப்பாற்றி விட்டோம். இப்பொழுதும் அவளைக் காப்பாற்றி விடுவோம் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. எங்கள் நம்பிக்கைக்கு உயிர் கொடுக்க உங்களால் முடியும். உங்களை நாடி வந்துள்ளேன். கை கொடுங்கள்.

குழந்தைகள் தான் ஒரு நாட்டின் எதிர்காலம் என்று சொல்வார்கள். ஆனால் ஒரு குழந்தை தன் எதிர்காலத்தை இழந்து தவித்து வருகிறது. அவளின் ஆசைகள் கனவுகள் எல்லாவற்றையும் நாம் நினைத்தால் துளிர்விடச் செய்யலாம். உங்களின் மனிதநேயக் கரங்கள் மட்டுமே அவளின் உயிரைக் காப்பாற்ற உதவும் மருந்து. இந்த குழந்தையின் எதிர்காலத்தை மீட்டெடுக்கும் பொறுப்பை நாம் ஏற்போம் உதவிக் கரம் நீட்டுவோம்.

ஒன்றுபடுங்கள் உயிர் காக்க உதவி செய்வோம்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+