காவிரி மருத்துவமனையில் போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் திடீர் ஆய்வு
காவிரி மருத்துவமனையிலிருந்து குடும்பத்தினர் வெளியேறினர்.
சென்னை: திமுக தலைவர் கருணாநிதி அனுமதிக்கப்பட்டுள்ள காவிரி மருத்துவமனைக்கு சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வாதன் வந்து பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு நடத்தினார்.
திமுக தலைவர் கருணாநிதி சென்னை காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இரத்த அழுத்தம் காரணமாக காவிரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த கருணாநிதியின் உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகள் பரபரப்பட்டு வந்தது.

இதனால் காவிரி மருத்துவமனைக்கு கருணாநிதியின் உறவினர்கள் அனைவரும் விரைந்தது மற்றும் போலீசாரின் திடீர் பாதுகாப்பு ஏற்பாடுகளால் தமிழகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அவரது உடல் நிலை குறித்து மாலைக்கு மேல் தகவல் பரவவே பெரும் கூட்டம் கூடி விட்டது.
இதற்கிடையே, கருணாநிதியின் உடல்நிலை குறித்து காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. கருணாநிதியின் உடல்நிலையில் தற்காலிக பின்னடைவு ஏற்பட்டதாகவும் சிகிச்சை பிறகு அவரது உடல்நிலை சீராகி வருவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தொண்டர் கூட்டம் கலையாமல் இருக்கவே போலீஸார் லேசான தடியடி நடத்திக் கூட்டத்தைக் கலைத்தனர். அத்தோடு தொண்டர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் கருணாநிதி குடும்பத்தினர் மருத்துவமனையிலிருந்து வெளியேறி விட்டனர்.
துணைவியர் ராஜாத்தி அம்மாள், பொதுச் செயலாளர் க.அன்பழகன், மு.க.ஸ்டாலின், துர்கா ஸ்டாலின், தயாநிதி மாறன் உள்ளிட்ட குடும்பத்தினரும், கட்சி முன்னணியினரும் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.
கருணாநிதி உடல் நிலை குறித்து பேட்டி அளித்த பின்னர் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசாவும் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். திமுக தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழி, மகன் மு.க.அழகிரி ஆகியோரும் மருத்துவமனையிலிருந்து புறப்பட்டுச் சென்றனர்.
இந்த நிலையில் தற்போது ராசாவும், வேலுவும் மீண்டும் மருத்துவமனைக்கு வந்துள்ளனர். இதனால் மீண்டும் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.
-
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
திருச்சி நர்சிங் மாணவி உயிரிழப்புக்கு தரமற்ற மருந்தே காரணம்.. ஆய்வறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications