ஜெயலலிதாவுக்கு நினைவிடம் - மே 7-ல் அடிக்கல் நாட்டு விழா!
ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைக்க மே 7 ஆம் தேதி அடிக்கல் நாட்டு விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: மெரினாவில் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைக்க மே 7 ஆம் தேதி அடிக்கல் நாட்டு விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி உயிரிழந்தார் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அவரது உடல் சென்னை மெரினாவில் உள்ள எம்ஜிஆர் சமாதி அருகே அடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில் சென்னை மெரினாவில் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைக்க மே 7ம் தேதி அடிக்கல் நாட்டு விழா நடத்தப்படும் என அதிமுக அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமியும் வெளியிட்டுள்ள அறிக்கையில், மெரினாவில் காலை 8.30 மணிக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் தொண்டர்களும், பொதுமக்களும் கலந்து கொள்ள வேண்டும் எனவும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா இறந்து ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு அவருக்கு நினைவிடம் அமைக்க அடிக்கல் நாட்டப்படுகிறது.
-
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி?












Click it and Unblock the Notifications