முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசின் 100 நாள் சாதனை பட்டியல் இது தான்!
முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசின் 100 நாள் சாதனைகள் வெளியிடப்பட்டுள்ளது.
Subscribe to Oneindia Tamil
சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசின் 100 நாள் சாதனைகள் குறித்து பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான தமிழக அரசு பதவியேற்று 100 நாட்கள் ஆவதையொட்டி 'நிலையான ஆட்சி-நிரந்தர வளர்ச்சி' என்ற தலைப்பில் தமிழக அரசின் சாதனை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
- விவசாயிகளுக்கு ரூ.2,247 கோடி நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது
- மீனவர்கள் வீட்டுவசதி திட்டத்தில் ரூ.1,75,000 வீதம் 5,000 வீடுகள் கட்ட ஆணை
- குடிநீர் பற்றாக்குறையை போக்க பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ.100 கோடி விடுவிக்கப்பட்டுள்ளன
- மகப்பேறு நிதியுதவி ரூ.12 ஆயிரத்தில் இருந்து ரூ.18 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது
- மீனவர்கள் வீட்டு வசதி திட்டத்தின் மூலம் ரூ.1.75 லட்சம் செலவில் 5 ஆயிரம் வீடுகள் கட்ட உத்தரவிடப்பட்டுள்ளது
- வேளாண் உற்பத்தி அதிகரித்து 1,58,000 விவசாயிகளுக்கு ரூ.882 கோடி பயிர்க்கடன்
- தென்னையில் இருந்து நீரா பானம் உற்பத்தி செய்ய அரசு அனுமதி அளித்துள்ளது
- ஆயிரத்து 161 இளைஞர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது
- வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை இருமடங்காக உயர்த்தப்பட்டுள்ளது
- ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 187 உதவி பேராசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்
- பள்ளிக் கல்வித்துறை மூலம் 10-ம் வகுப்பு 12-ம் வகுப்பில் முதல் 3 இடங்களை அறிவிக்கும் நடைமுறை ரத்து செய்யப்பட்டது
- ரூ.200 கோடி செலவில் அம்மா வாகன திட்டத்தில் முதல்வர் கையெழுத்து போடப்பட்டுள்ளது
- தமிழகம் முழுவதும் 169 புதிய பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன.
- ரூ.65 கோடியில் 69 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.
- போக்குவரத்து ஊழியர்களுக்கு நிலுவைத்தொகை ரூ.1,250 கோடி ஓதுக்கீடு
- 400 கோடியில் தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகளில் குடிமராமத்து பணிகள்.
- தொழுநோய் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை ரூ.1,500-க உயர்வு.
- ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க 4,900 மெட்ரிக் டன் அரிசி வழங்கல்.
- விழுப்புரம், ராமநாதபுரம், தருமபுரியில் புதிய சட்டக்கல்லூரி தொடங்க அனுமதி உள்ளிட்ட பல்வேறு சாதனை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளன.
More From
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications