மேட்டூருக்கு நீர் வரத்து அதிகரிப்பு... காவிரியில் 7,600 கன அடி நீர் திறப்பு

Subscribe to Oneindia Tamil

மேட்டூர்: கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு அதிகரித்து வருவதால் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.

கர்நாடகத்தின் கபிணி, கேஆர்எஸ் அணைகளிலிருந்து காவிரியில் நீர் திறந்து விடப்பட்டதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

mettur dam receives more water from Karnataka

கர்நாடக அணையிலிருந்து காவிரியில் நீர் திறந்து விடப்பட்டதால் மேட்டூர் அணையின் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மேட்டூர் அணையின் நீர்வரத்து, 4,013 கனஅடியிலிருந்து 4,615 கனஅடியாக அதிகரித்தது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 73.94 அடியாகவும், நீர் இருப்பு 36.18 டி.எம்.சி.,யாகவும் உள்ளது. மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்காக வினாடிக்கு 12,000 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.

இந்நிலையில் கபிணி அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 1,300 கன அடியில் இருந்து 2,500 கன அடியாகவும், கேஆர்எஸ் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 2,000 கன அடியிலிருந்து 5100 கன அடியாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் கர்நாடகாவில் இருந்து காவிரி ஆற்றுக்கு வரும் நீரின் அளவு 7,600 கன அடியாக அதிகரித்துள்ளது. காவிரி ஆற்றுக்கு வரும் நீர் அதிகரிக்கப்பட்டுள்ளதால் டெல்டா விவசாயிகள் உழவுப் பணிகளைத் தொடங்கியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+