மானிய விலையில் ஸ்கூட்டர்- விண்ணப்பிக்க பிப். 10 வரை கால அவகாசம் நீட்டிப்பு
மானிய விலையில் ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்திற்கு விண்ணப்பிக்க பிப். 10ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.
சென்னை: தமிழக அரசு அறிவித்துள்ள மானிய விலையில் ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்திற்கு விண்ணப்பிக்க பிப்ரவரி 10ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.
வேலைக்குச் செல்லும் மகளிர் பயனுறும் வகையில் இரு சக்கர வாகனம் வாங்கிட ரூ.25 ஆயிரம் மானியம் அரசு சார்பில் வழங்கப்படும் என கடந்த 2016 சட்டசபைக்கான தேர்தல் அறிக்கையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார்.

இந்தத் திட்டத்தை தற்போதைய எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு செயல்படுத்த நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. அதன்படி முதற்கட்டமாக ஜெயலலிதாவின் பிறந்தநாளான பிப்ரவரி 24ம் தேதி இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இதற்காக தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும், அதற்கான விண்ணப்பம் ஊராட்சி, பேரூராட்சி அலுவலகங்களில் வழங்கப்படும் என்றும் ஜனவரி 22ம் தேதி அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து மானிய விலை ஸ்கூட்டர் வாங்க விண்ணப்பிக்கவும், இரு சக்கர வாகனத்திற்கான ஓட்டுநர் உரிமம் பெறவும் பெண்கள் பெருமளவு வட்டாரப்போக்குவரத்து அலுவலகங்களிலும் குவிந்தனர்.
மானிய விலை ஸ்கூட்டருக்கு விண்ணப்பிக்க நேற்றே கடைசி நாள் என்று அறிவித்து இருந்த நிலையில், அனைத்து மாவட்டங்களிலும் பெண்கள் கூட்டம் அலைமோதியது. இந்நிலையில், விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் பிப்ரவரி 10ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஒரு லட்சம் விண்ணப்பங்கள் பெற அரசு திட்டமிட்டு இருந்த நிலையில், குறைந்த அளவிலேயே விண்ணப்பங்கள் பெறப்பட்டு உள்ளதால், கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அரசின் இந்த கால அவகாச நீட்டிப்பு அறிவிப்பால் பெண்கள் மிகுந்த உற்சாகம் அடைந்து உள்ளனர். அதனால் தொடர்ந்து இன்றும் ஊராட்சி, பேரூராட்சி அலுவலகங்களுக்கு படையெடுக்கத் துவங்கி உள்ளனர்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications