திடீர் திடீரென தீ்ப்பிடித்து எரிந்த குழந்தை.. சேரன் மகள் தாமினி பரபரப்பு.. பாஜகவுடன் கை கோர்த்த வைகோ
சென்னை: 2013ம் ஆண்டின் கடைசி மாதங்களிலும் கூட தமிழகத்தில் பரபரப்புச் சம்பவங்களுக்குப் பஞ்சமே இல்லை.
திடீர் திடீரென உடலில் தீப்பிடித்து எரிந்த விழுப்புரம் குழந்தை, இயக்குநர் சேரன் மகள் தாமினி ஏற்படுத்திய பரபரப்பு, திருச்சிக்கு வந்த நரேந்திர மோடி, திடீிரென பதவி விலகிய ஜெயந்தி நடராஜன் என்று சம்பவங்களுக்குப் பற்றாக்குறையே இல்லை.
இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் மீது அவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் கேரளாவைச் சேர்ந்த பெண் கூறிய பாலியல் சில்மிஷப் புகார் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. அதேபோல கஞ்சா வழக்கிலிருந்து சுதாகரன் விடுவிக்கப்பட்டதும் முக்கியச் செய்தியாக இருந்தது.

திடீர் திடீரென தீ்ப்பிடித்து எரிந்த குழந்தை
விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த கர்ணன் - ராஜேஸ்வரி தம்பதியின் குழந்தை உடலில் திடீர் திடீரென தீப்பிடித்து எரிந்த விவகாரம் தமிழகத்தை மட்டுமல்லாமல் இந்தியாவின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்தது.

சேரன் மகள் தாமினி ஏற்படுத்திய பரபரப்பு
தமிழகத்தை இந்த ஆண்டு பரபரப்பில் ஆழ்த்திய இன்னொரு முக்கிய நிகழ்வு இயக்குநர் சேரனின் மகள் தாமினியின் காதல் விவகாரம்தான். பெரும் போராட்டம், உணர்ச்சிப் பெருக்குடன் கூடிய சந்திப்புகள், சமரசங்கள், சட்டப் போராட்டங்களுக்குப் பின்னர் ஒரு வழியாக, காதலரை விட்டு விலகி பெற்றோருடன் சென்றார் தாமினி.

ஜேம்ஸ் வசந்தன் மீதான சில்மிஷப் புகார்
இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் தன்னிடம் செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறி அவரது பக்கத்து வீட்டுககாரப் பெண் பரபரப்பை ஏற்படுத்தினார். ஆனால் இது இனவெறியுடன் கூடிய புகார் என்று ஜேம்ஸ் வசந்தன் மறுத்தார். கைது செய்யப்பட்ட அவர் பின்னர் விடுவிக்கப்பட்டார்.

திருச்சியில் நரேந்திர மோடி
பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி திருச்சியில் நடந்த பாஜக இளந்தாமரை மாநாட்டில் கலந்து கொண்டார். பெரும் கூட்டம் கூடிய இக்கூட்டம் மோடிக்கும், பாஜகவினருக்கும் உற்சாகத்தைக் கொடுத்தது.

கஞ்சா வழக்கிலிருந்து சுதாகரன் விடுதலை
முதல்வர் ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரன், போதைப் பொருள் வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டார்.

திரைத்துறையில் சாதனை... ஜெ.வுக்கு விருது
சென்னையில் நடந்த சினிமா நூற்றாண்டு விழாவில் திரைத்துறையில் சாதனை படைத்ததற்கான விருதினை முதல்வர் ஜெயலலிதா, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வழங்கினார்.

பாஜகவில் எஸ்.வி.சேகர்
நடிகரும், முன்னாள் அதிமுக எம்.எல்.ஏவுமான எஸ்.வி.சேகர், பாஜகவில் இணைந்து கொண்டார்.

பா.ராமச்சந்திர ஆதித்தன் மறைந்தார்
மாலை முரசு அதிபர் பா.ராமச்சந்திர ஆதித்தன் மரணமடைந்தார்.

தயாளு அம்மாளிடம் விசாரணை
2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளுவிடம், சென்னையில் உள்ள அவரது வீட்டில் வைத்து மாஜிஸ்திரேட் கோபாலன் விசாரணை நடத்தி வாக்குமூலத்தைப் பதிவு செய்தார்.

ஏற்காடு இடைத் தேர்தலில் அதிமுக அமோக வெற்றி
ஏற்காடு சட்டசபைத் தொகுதிக்கு நடந்த இடைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட பி.சரோஜா அமோக வெற்றி பெற்றார். இவர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் மாறனை, 78,116 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

பாஜகவுடன் கை கோர்த்த வைகோ
டெல்லியில் பாஜக தலைவர் ராஜ்நாத் சிங்கை நேரில் சந்தித்துப் பேசி லோக்சபா தேர்தலுக்கான கூட்டணியை உறுதி செய்தார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ.

சந்தானம் வீட்டில் ரெய்டு
நடிகர் சந்தானம் உள்ளிட்ட சினிமாக்காரர்கள் வீடுகளில் வருமான வரித்துறையினர் அதிரடி ரெய்டு நடத்தினர்.

மெட்ரோ ரயில் டெஸ்ட்டிங்
சென்னையில் ரூ. 14,000 கோடியில் செயல்படுத்தப்படவுள்ள மெட்ரோ ரயிலின் சோதனை ஓட்டத்தை முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார். ரயிலுக்குள் ஏறியும் அவர் ஆய்வு செய்து பார்த்தார்.

திறக்கப்பட்டது முள்ளிவாய்க்கால் முற்றம்
தஞ்சாவூரில் அமைக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் முற்றம் பலத்த பரபரப்புக்கு மத்தியில் நவம்பர் 6ம் தேதி திறந்து வைக்கப்பட்டது. ஆனால் போலீஸாரும், வருவாய்த்துறையினரும், முற்றத்தின் சுற்றுச்சுவரை இடித்துத் தள்ளியதால் பெரும் அதிர்ச்சி அலைகள் பரவின.

மறைந்தார் புஷ்பா தங்கதுரை
பிரபல எழுத்தாளர் புஷ்பா தங்கதுரை மரணமடைந்தார்.

திடீரென விலகிய ஜெயந்தி நடராஜன்
மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெயந்தி நடராஜன் தனது அமைச்சர் பதவியை திடீரென ராஜினாமா செய்ததால் பெரும் சலசலப்பு ஏற்பட்டது.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications