ஈ டிவியின் நியூஸ்18 உட்பட 3 புதிய தமிழ் சேனல்கள் உதயம்
சென்னை: தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஈ டிவியின் நியூஸ்18, காவேரி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மருதம் டெலிவிஷன் நெட்வொர்க் சார்பில் ‘வெளிச்சம்' ஆகிய புதிய டிவி சேனல்கள் இன்று உதயமாகியுள்ளன.
இந்தியாவின் முன்ணனி பொழுதுபோக்கு மற்றும் செய்திகள் தொலைக்காட்சி நிறுவனமான நெட்வொர்க் 18 தென்னிந்தியாவில் செய்திகள் தொலைக்காட்சியினை ஆந்திரா மாநிலத்தின் ஈ-டிவி நிறுவனத்துடன் இணைந்து தெலுங்கு, கன்னடா, பெங்காளி, மற்றும் ஹிந்தி மொழிகளில் செய்தி தொலைக்காட்சிகளை கடந்த ஆண்டில் தொடங்கியது.

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி திரைப்பட நகரில் இருந்து ஒளிபரப்பை தொடங்கிய இந்த சேனல்கள் பின்னர் அந்தந்த மாநிலங்களில் இருந்து தற்போது ஒளிபரப்பு செய்துவருகின்றன.
தற்சமயம் தமிழ் மற்றும் மலையாளம், வடகிழக்கு மொழிகளில் செய்திகள் தொலைக்காட்சியினை தொடங்கியுள்ளனர். நியூஸ்18 தமிழ், நியூஸ்18 மலையாளம், நியூஸ்18 அஸ்ஸாம் ஆகிய மூன்று தொலைக்காட்சிகளின் செயற்கைகோள் ஒளிபரப்பு இன்டல்சாட் 20 செயற்கைகோளில் நெட்வொர்க் 18-யின் தொலைக்காட்சிகளின் அலைவரிசையில் தொடங்கப்பட்டுள்ளது. அதேபோல் காவேரி என்ற தமிழ் தொலைக்காட்சியும் சோதனை ஒளிபரப்பை தொடங்கியுள்ளது.
இதனிடையே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மருதம் டெலிவிஷன் நெட்வொர்க் சார்பில் ‘வெளிச்சம்' என்ற புதிய டிவி சேனல் தொடங்கப்பட்டுள்ளது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளிச்சம் டிவி சேனலை தொடங்கி வைத்தார். 24 மணி நேரமும் ஒளிப்பரப்படும் இந்த சேனலில், ஒரு நாளைக்கு மூன்று முறை செய்திகள் இடம் பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள் -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே!












Click it and Unblock the Notifications