அரசு பஸ்களில், படுக்கை, வைஃபை, கழிவறை, சிசிடிவி கேமரா.. அதிரடி அறிவிப்புகளை வெளியிட்ட விஜயபாஸ்கர்
Subscribe to Oneindia Tamil
சென்னை: அரசு பஸ்களில் வைஃபை வசதி, படுக்கை வசதி, சிசிடிவி கேமிரா உள்ளிட்ட பல வசதிகள் அமைத்து தரப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சட்டசபையில் இன்று தெரிவித்தார்.

சட்டசபையில் இன்று விஜயபாஸ்கர் வெளியிட்ட போக்குவரத்துத்துறை அறிவிப்புகளில் முக்கியமானவை:
- நீண்டதூரம் பயணிக்கும் அரசு குளிர்சாதன பேருந்துகளில் வைஃபை வசதி ஏற்படுத்தப்படும்
- நீண்ட தூரம் செல்லும் பஸ்களில் கழிப்பறை வசதி எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்கப்படும்
- இரவு நீண்ட தூரம் செல்லும் பஸ்களில் படுக்கை வசதி ஏற்படுத்தப்படும்
- போக்குவரத்து கழக பணிமனைகளில் ஏடிஎம் வசதி செய்து தரப்படும்
- அரசு போக்குவரத்து கழக பேருந்துகளில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பை உறுதிபடுத்த சிசிடிவி பொருத்தப்படும்












Click it and Unblock the Notifications