அயயோ.. இப்படியே போனா என்னாகுறது.. தமிழகத்தில் 11% கம்மியாதான் வ.கி. பருவமழை பெய்திருக்காம்!

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தற்போது வரை 11 சதவீதம் குறைவாக பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    தமிழகத்தில் இன்று மழை பெய்யுமா?- வீடியோ

    சென்னை: தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தற்போது வரை 11 சதவீதம் குறைவாக பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    தமிழகத்திற்கு தேவையான நீரை தரும் வடகிழக்குப் பருவமழை கடந்த மாதம் 27ஆம் தேதி தொடங்கியது. வழக்கமாக அக்டோபர் மாதம் 20 ஆம் தேதிகளில் தொடங்க வேண்டிய மழை இந்த ஆண்டு ஒரு வாரம் தாமதமாக தொடங்கியது.

    ஆனாலும் இயல்பை விட அதிகமாக மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டது. அதற்கேற்றார் போல் தொடங்கியது முதலே மழை தீவிரம் காட்டியது.

    கனமழை கொட்டியது

    கனமழை கொட்டியது

    வங்கக்கடலில் முதலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலையில் சுமார் 9 நாட்கள் மழை நீடித்தது. அப்போது சென்னை உட்பட கடலோர மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது.

    கடல்போல் காட்சியளித்த சாலை

    கடல்போல் காட்சியளித்த சாலை

    சென்னை மெரினாவில் ஒரே இரவில் 30 சென்டி மீட்டர் மழை கொட்டியது. கடல் எது கரை எது என தெரியாத அளவுக்கு மழை நீர் தேங்கி சாலை வரை கடல்போல் காட்சியளித்தது.

    நீரில் மூழ்கிய நிலங்கள்

    நீரில் மூழ்கிய நிலங்கள்

    இதனால் பக்கிங்ஹாம் கால்வாய் நிரம்பி மயிலாப்பூர், சாந்தோம் உள்ளிட்ட இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதேபோல் டெல்டா மாவட்டங்களில் கொட்டிய மழையால் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் நீரில் மூழ்கின.

    கடந்த வாரம் உருவானது

    கடந்த வாரம் உருவானது

    இதைத்தொடர்ந்து காற்றழுத்த தாழ்வு நிலை மறைந்ததால் தமிழகத்தில் மழை குறைந்தது. இந்நிலையில் வங்கக்கடலில் இலங்கை அருகே மீண்டும் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வுநிலை கடந்த வாரம் உருவானது.

    மக்கள் ஏமாற்றம்

    மக்கள் ஏமாற்றம்

    இதன் காரணமாக கடந்த சனிக்கிழமை இரவு முதல் சென்னையில் கனமழை கொட்டும் என கூறப்பட்ட நிலையில் மொத்த மழையும் கடலிலேயே பெய்துவிட்டது. இதனால் மக்கள் பெரும் ஏமாற்றமடைந்தனர்.

    சாரல் மழை பெய்கிறது

    சாரல் மழை பெய்கிறது

    ஞாயிற்றுக் கிழமை இரவு முதல் நேற்று மாலை வரை சென்னையில் லேசான மழை பெய்தது. இன்றும் அவ்வப்போது விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருகிறது.

    11 சதவீதம் குறைவு

    11 சதவீதம் குறைவு

    காற்றழுத்த தாழ்வு நிலை வட திசையில் நகர்வதால் தமிழகத்தில் நாளை முதல் மழை இருக்காது என கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது வரை தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை 11 சதவீதம் மழை குறைவாக பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+