ஜல்லிக்கட்டு போராட்டம்.. போலீஸ் தாக்குதலில் பார்வையிழந்த வாலிபர்.. ரூ.50 லட்சம் கேட்டு தாய் வழக்கு
சென்னை: ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது காவல்துறை வீடு புகுந்து தாக்குதல் நடத்தியதில் பார்வையிழந்தவருக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டது.
ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான தடையை நீக்க வேண்டும் என்று மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், பாலமேடு ஆகிய பகுதிகளில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து சென்ன மெரினாவில் லட்சக்கணக்கான இளைஞர்கள் ஒன்று கூடி அற வழிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சுமார் 8 நாள்கள் நடைபெற்ற இப்போராட்டத்தில், முதல்வராக இருந்த ஓ.பன்னீர் செல்வம் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து தமிழக சட்டசபையில் அவசர சட்டம் பிறப்பிக்க அனுமதி கோரினார்.

சென்னையில் கலவரம்
அதற்கு அனுமதி கிடைத்து அவசர பிறப்பிக்க இருந்த நிலையில் மெரினாவில் கூடியிருந்த மாணவர்களை போலீஸார் கலைந்து போக வலியுறுத்தினர். இந்நிலையில் ஜன.23-ஆம் தேதி சென்னையில் திருவல்லிக்கேணி, கலங்கரை விளக்கம், கடற்கரை சாலை உள்ளிட்ட பகுதிகளில் கலவரம் நடந்தது.

காவல்துறை தாக்குதல்
அப்போது கலவரக்காரர்களை கலைப்பதற்காக போலீஸார் கண்ணீர் புகை வீசுதல் உள்ளிட்ட பல்வேறு உத்திகளை கையாண்டனர். அங்கிருந்து குடியிருப்புகளுக்குள் இருந்த சிலரையும் போலீஸார் தாக்கியதாக குற்றம்சாட்டப்பட்டது.

ரூ.50 லட்சம் இழப்பீடு
அத்தகைய தாக்குதலின்போது கலங்கரை விளக்கம் அருகே இருந்த வீட்டில் போலீஸார் தாக்குதல் நடத்தியதில் கார்த்திக் என்பவர் பார்வையிழந்தார். காவல்துறை தாக்குதலால் பார்வையிழந்த தனது மகனுக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்கக் கூறி அவரது தாய் விமலா சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு தொடுத்துள்ளார்.

காவலர்கள் மீது நடவடிக்கை
அந்த மனுவில், தனது மகனுக்கு சிகிச்சை அளிக்கவும், தாக்குதல் நடத்திய காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தியுள்ளார். அப்போது காவல் துறையின் தாக்குதல் விவகாரம் தொடர்பாக கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் ஆணை பிறப்பித்துள்ளனர்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications