சட்டசபையில் அவைக் காவலர் சீருடையில் வந்தாரா துணை கமிஷனர்? வைரலாகும் போட்டோ

தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களை வெளியேற்ற அவைக் காவலர் சீறுடையில் போலீஸ் அதிகாரிகளுக்கு அனுமதி அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: சட்டசபையில் இன்று நடந்த களேபரத்தில் அம்பத்துார் போலீஸ் துணை கமிஷனர் சுதாகர் சட்டசபை காவலராக மாறுவேடத்தில் வந்தது போன்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

தமிழக சட்டமன்றத்தில் முதல்வர் எடைப்பாடி பழனிச்சாமி அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது. இதில் க்ளோபரம் நடந்தது. இதை கண்டித்து தி.மு.க., சட்டமன்ற உறுப்பினர்கள் சபாநாயகர் தனபாலை முற்றுகையிட்டு அமளியில் ஈடுபட்டனர். இதனால், அவையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து சட்டசபை காவலர்கள் மூலம் தி.மு.க., எம்.எல்.ஏ.,க்களை குண்டு கட்டாக வெளியேற்ற உத்தரவிட்டார் சபாநாயகர்.

 The photo of a policeman inside of assembly, viral photo in social media

எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் சட்டசபை காவலர்களால் சட்டை கிழிக்கப்பட்ட நிலையில் குண்டுகட்டாக வெளியேற்றப்பட்டார். தி.மு.க., எம்.எல்.ஏ.,க்களும் வெளியேற்றப்பட்டனர்.

இந்நிலையில், சட்டசபை காவலர்களாக சென்னையில் உள்ள போலீஸ் அதிகாரிகள் மாறுவேடத்தில் வந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அம்பத்துார் போலீஸ் துணை கமிஷனர் சுதாகர் சட்டசபை காவலராக மாறுவேடத்தில் வந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. சட்டசபைக்கு என தணிகாவலர்கள் இருக்கும் போது உயர் அதிகாரி எப்படி வந்தார் என்பது குறித்து சமூக வளைத்தளங்களில் பரப்பரப்பு பரவி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+