தேர்தல் என்றால் திமுக -அதிமுக மட்டுமா?.. ஜெயக்குமார் கருத்துக்கு மக்கள் என்ன சொல்றாங்க தெரியுமா?
கால்பந்து என்றால் ரொனால்டோ-மெஸ்ஸி போல தேர்தல் என்றால் அதிமுக- திமுக தான் என்று அமைச்சர் ஜெயக்குமார் பேசியது குறித்து ஒன்இந்தியா வாசகர்களிடம் கேட்கப்பட்டது.
Recommended Video

சென்னை: கால்பந்து என்றால் ரொனால்டோ-மெஸ்ஸி போல தேர்தல் என்றால் அதிமுக- திமுக தான் என்று அமைச்சர் ஜெயக்குமார் பேசியது குறித்து ஒன்இந்தியா வாசகர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு, அந்த காலமெல்லாம் மாறிவிட்டதாக பெரும்பான்மையான மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இது கட்சி தொடங்கும் காலம் என்று சொல்லும் அளவிற்கு தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக நிறைய கட்சிகள் உருவாகிக் கொண்டே இருக்கிறது. முக்கியாக ரஜினி, கமல் என்று முன்னணி நடிகர்கள் எல்லோரும் அரசியலில் குதித்து இருக்கிறார்கள்.
ஆனால் இத்தனைக்கும் மத்தியில் தேர்தல் என்றால் எப்போதும் திமுகவும், அதிமுகவும் மட்டும்தான், இதற்கு இடையில் வேறு கட்சிகள் போட்டிக்கு வர முடியாது என்று அமைச்சர் ஜெயக்குமார் குறிப்பிட்டார். இதற்கு ஒன்இந்தியா வாசகர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

கருத்து சரிதான்
நிறைய வாசகர்கள் ''அவரின் கருத்து சரிதான்'' என்று கூறியுள்ளனர். மொத்தமாக 21.44% பேர் ஜெயக்குமார் சொன்ன கருத்து சரிதான் என்ற பதிலை தேர்வு செய்துள்ளனர்.

இப்ப இல்லை
அதேசமயம், கருத்துக் கணிப்பில் கலந்து கொண்டவர்களில் அதிகமாக 36.27% பேர் இந்த விஷயத்தை எதிர்த்து இருக்கிறார்கள். அதெல்லாம் இப்ப இல்லை, எல்லாம் பழைய காலம் என்ற பதிலைத் தேர்வு செய்து வாக்களித்துள்ளனர்.

ஓரளவு உண்மைதான் பாஸ்
சிலர் இந்த விஷயம் பற்றி வேறு விதத்தில் வாக்களித்துள்ளார்கள். அதன்படி ஜெயக்குமார் கூறுவதும் கூட ஓரளவு உண்மைதான் என்று 9% மக்கள் வாக்களித்துள்ளார்கள்.

இது மாறும்
கருத்துக் கணிப்பில் கலந்து கொண்டவர்களில் 33.29% பேர் இந்த விஷயத்திற்கு புதிய கருத்து தெரிவித்து இருக்கிறார்கள். ஜெயக்குமார் சொன்னது உண்மைதான் ஆனால் விரைவில் இது மாறும் என்ற பதிலைத் தேர்வு செய்து வாக்களித்துள்ளனர்.
-
ஆக்டிவ் மோடில் ஸ்டாலின்.. கையில் எடுத்த பிரச்சார ஆயுதம்.. 2021 தேர்தலில் திமுக போட்ட பக்கா ஸ்கெட்ச் -
அதிமுக, பாஜக நேரடி போட்டியில்லை.. பெரம்பூரில் தவெக விஜய்க்கு சாதகம்? களமிறக்கிவிடப்பட்ட பாமக! -
தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் ஏன்? பின்னணியில் 2 ஜாதிகளின் ஓட்டுகளுக்கு குறி.. ஸ்டாலின் போடும் கணக்கு -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு -
15 ஆண்டுகளாக 1 சீட் கூட ஜெயிக்காத தேமுதிகவுக்கு 10 தொகுதிகளா? திமுக கூட்டணிக்குள் கொதிப்பு! -
தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி.. கடும் போட்டி கொடுக்கும் அதிமுக! விஜய் நிலைமை.. வெளியான புதிய கருத்து கணிப்பு -
0.43% பிரேமலதாவுக்கு 10+1..3% கமலுக்கு 0! இன்னொரு மதிமுக மநீம? நீங்க சினிமாவுக்கே போயிருங்க ஆண்டவரே! -
திமுக விட்டுக் கொடுத்துள்ளதால்.. நாங்களும் இறங்கினோம்.. மனம் திறந்த திருமாவளவன் -
காங்கிரஸை நாயுடன் ஒப்பிட்ட நடிகர் போஸ் வெங்கட்! கைநழுவும் அறந்தாங்கி தொகுதி சீட்? டென்ஷன் -
பெரம்பூரில் தனி வீடு வாங்கும் விஜய்.. 'அந்நியன்' இமேஜை உடைக்க மாஸ்டர் பிளான்.. களமிறங்கிய ப்ரோக்கர் -
புதுச்சேரி திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு.. ஒரு தொகுதி விசிகவுக்கு ஒதுக்கீடு! யார் யாருக்கு சீட்? -
எங்க வந்து யாருக்கிட்ட.. கொங்கு மண்டலத்துக்கு உதயநிதி மாஸ் பிளான்.. களமிறங்கும் இளைஞரணி












Click it and Unblock the Notifications