இருக்கிற தலைவலி போதாதென்று இது வேற! நெல்லை மேயரை மாற்றணுமாம்! ஸ்டாலினுக்கு குடைச்சல் தரும் போஸ்டர்!

Subscribe to Oneindia Tamil

நெல்லை: முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஏற்கனவே இருக்கின்ற தலைவலி போதாதென்று நெல்லையிலிருந்து புதிய பஞ்சாயத்து ஒன்று கிளம்பியுள்ளது. நெல்லை மாநகராட்சி மேயர் சரவணன் மீது முதல்வர் நடவடிக்கை எடுக்கக் கோரி ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

நெல்லை மாநகராட்சியில் மொத்தம் 55 வார்டுகள் உள்ள நிலையில் அதில் 51 இடங்களில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சியை சேர்ந்தவர்கள் கவுன்சிலர்களாக உள்ளனர். இதில் ஒரு தரப்பினர் மேயர் சரவணனுக்கு ஆதரவாகவும் மற்றொரு தரப்பினர் அவருக்கு எதிராகவும் இருந்து வருகின்றனர்.

The posters put up criticized against Tirunelveli Corporation Mayor Saravanan

இதனால் நெல்லை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் அவ்வப்போது சலசலப்புகள் ஏற்படும். இதனிடையே நெல்லை மேயரை மாற்றக்கோரி கவுன்சிலர்களில் ஒரு தரப்பினர் அமைச்சர் நேருவை நேரில் சந்தித்து முறையிட்டனர். அவர் நடத்திய பஞ்சாயத்தை தொடர்ந்து அந்த பிரச்சனை ஓரளவு கட்டுக்குள் வந்தது.

இதனிடையே இப்போது சமூக ஆர்வலர் நம்பிக்குமார் என்பவர் பெயரில் நெல்லை மாநகரம் முழுவதும் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களில், ''தமிழக அரசே தமிழக அரசே, எங்கள் பெரும் நம்பிக்கைக்குரிய முதல்வர் அவர்களே, மாமன்ற உறுப்பினர்களல் மீண்டும் மீண்டும் குற்றச்சாட்டு கூறியும், 25% கமிஷன் வாங்கி கல்லா நிரப்பத் துடிக்கும் நெல்லை மேயர் மீது உடனடியாக நடவடிக்கை எடு'' என வாசகங்கள் அச்சிடப்பட்டுள்ளன.

The posters put up criticized against Tirunelveli Corporation Mayor Saravanan

மேலும், ''ஊழலால் முடங்கி கிடக்கும் மக்கள் பணிகளை உடனடியாக தொடங்கிட நடவடிக்கை எடு'' என முதல்வருக்கு கோரிக்கை விடுக்கும் வகையில் அந்த போஸ்டரில் வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. செந்தில்பாலாஜி கைது விவகாரத்தால் கடும் அப்செட்டில் உள்ள முதல்வருக்கு நெல்லை போஸ்டர் விவகாரம் இன்னொரு தலைவலியாக பார்க்கப்படுகிறது.

இதனிடையே மேயர் சரவணன் ஆதரவு கவுன்சிலர்கள், சர்ச்சைகுரிய இந்த போஸ்டர் குறித்து காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+