அட, நம்ம ஆமை, முயல் கதை உண்மை தான் போல... இந்த வீடியோவைப் பாருங்களேன்!
சென்னை: சிறுவயதிலேயே நாம் அனைவரும் கேட்ட கதைகளில் முக்கியமானது பாட்டி வடை சுட்ட கதையும், முயல்- ஆமை போட்டி கதையும். இன்றளவும் இந்த கதை அப்படியே தொடர்கிறது.
தொழில்நுட்ப வளர்ச்சியால் நம் குழந்தைகள் எவ்வளவோ முன்னேற்றங்களைச் சந்தித்தாலும், இந்தக் கதைகளையும் இது தரும் பாடத்தையும் அவர்கள் தவற விடுவதில்லை. அந்தளவிற்கு நம் வாழ்வோடு ஒன்றிப் போனது இந்தக் கதைகள்.
அதிலும் குறிப்பாக முயல் - ஆமை கதையைச் சொல்ல வேண்டும். உடல் அளவில் எவ்வித குறைகள் இருந்தாலும், இலக்கை நோக்கிய தெளிவான பயணம் நிச்சயம் வெற்றியைப் பரிசாகத் தரும் என்பதே இந்த கதையின் கருத்து.
இது நாள் வரை கற்பனைக் கதையாக மட்டுமே அறியப்பட்டு வந்த இந்தக் கதையை நிஜத்தில் பரீட்சித்து பார்த்துள்ளனர். இது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது. ஆனால், இது எந்த நாட்டில் நடந்தது எனத் தெரியவில்லை.
நிஜமாகவே ஆமை ஒன்றிற்கும், முயல் ஒன்றிற்கும் போட்டி நடத்தப்படுகிறது. ஆரம்பத்தில் வேகமாக ஓடும் முயல் பின்னர் தன்னைச் சுற்றிய ஆரவாரங்களால் கவனம் கலைந்து ஒரே இடத்தில் நின்று வேடிக்கைப் பார்க்கிறது. ஆனால், இது எதைப் பற்றியும் கவலைப்படாத ஆமையோ, சுற்றியுள்ளவர்களின் சத்தத்தை காதில் போட்டுக் கொள்ளாமல் கடமையே கண்ணாக தன் இலக்கை பொறுமையாக அடைந்து வெற்றியடைகிறது.
இனி நம் குழந்தைகளுக்கு இந்த வீடியோவைக் காட்டி ஆதாரப்பூர்வமாக முயல் - ஆமை கதையை நாம் சொல்லலாம்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications