Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரஜினி கட்சியில் ’லைக்கா’ ராஜூ மகாலிங்கம் இணைந்ததற்கு இப்படியும் ஒரு காரணமா?

லைக்காவில் இருந்து ராஜூ மகாலிங்கம் ராஜினாமா செய்தது எதற்காக என்கிற கேள்வி ரஜினி ரசிகர்களிடையே எழுந்து உள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை : ரஜினி கட்சியில் சேருவதற்காக லைக்கா தயாரிப்பு நிறுவன இந்திய கிளைத் தலைவர் ராஜூ மகாலிங்கம் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறி இருப்பது பொய் என்கிற தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த 31ம் தேதி ரசிகர்களை சந்தித்த ரஜினி, தான் தனிக்கட்சி ஆரம்பித்து வருகிற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளதாக அறிவித்தார். இதனையடுத்து தமிழக அரசியல் களத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

The Real reason behind why Lyca Raju Mahalingam resigned his post

ரஜினியின் கட்சி பெயர், கொடி, கொள்கைகள் எப்படி இருக்கும் ? மக்களை எப்போது சந்திப்பார் ? யாருடன் கூட்டணி அமைப்பார் ? போன்ற விவாதங்கள் எழுந்து உள்ளன. இந்நிலையில், தற்போது அனைத்து ரசிகர்களையும் ஒன்றிணைப்பது தான் முக்கியம் என்று ரஜினி அறிவித்து உள்ளார்.

அதற்காக பிரத்யேகமாக இணையதளங்களும், ஆப்களும் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன. ரஜினியின் அரசியல் குறித்த அறிவிப்பிற்கு சினிமா உலகினர், தொழிலதிபர்கள் என பலரும் தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்‌ஷேவின் மகன், நமல் ராஜபக்‌ஷே உட்பட பலரும் ரஜினியின் இந்த அறிவிப்பை வரவேற்று உள்ளனர்.

இந்நிலையில், நேற்று லைக்கா தயாரிப்பு நிறுவனத்தின் இந்திய கிளை தலைவராக இருந்த ராஜூ மகாலிங்கம், தீவிர ரஜினி ரசிகர். இவர் ரஜினி ஆரம்பிக்கப் போகும் கட்சியில் சேருவதற்காக தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியது. இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.

ஆனால், அவர் ராஜினாமா செய்ததற்கு வேறு காரணமாக சில சமூக வலைதளங்களில் செய்திகள் வலம் வருகின்றன. ரஜினி கட்சியில் சேருவதற்காக அவர் ராஜினாமா செய்யவில்லை என்றும், வேறு காரணத்தை ராஜு மகாலிங்கம் மறைத்து கட்சியில் சேர்ந்துள்ளார் என்றும் அந்த சமூக வலைதள செய்திகள் கூறுகின்றன. உண்மை என்னவோ தெரியவில்லை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+