நானாக நானில்லை தாயே நல்வாழ்வு தந்தாயே நீயே! திருவாரூரில் தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் மறைந்த அம்மாவின் நினைவாக அவரது பெயரில் தாஜ்மஹால் போன்ற பிரம்மாண்ட மணிமண்டபத்தை 1 ஏக்கர் பரப்பளவில் கட்டியிருக்கிறார் அவரது மகன்.
திருவாரூர் மாவட்டம் அம்மையப்பன் கிராமத்தை சேர்ந்த சேக்தாவூது -ஜெய்லானி பீவி அம்மாள் தம்பதியின் மகன் அமீருதீன். இவர் சென்னையில் தொழிலதிபராக உள்ளார். தாய் தந்தை இருவர் மீதும் அளவுகடந்த பாசம் கொண்ட இவர் அவர்களது பெயரில் தனது சொந்த கிராமத்தில் தொடர்ந்து ஏழை எளியோருக்கு உதவிகள் செய்து வந்திருக்கிறார்.

இதனிடையே தந்தை மறைந்து 20 ஆண்டுகளை கடந்துவிட்ட நிலையில் தாயார் ஜெய்லானி பீவி அம்மாள் கடந்த 2020ஆம் காலமானார். இதையடுத்து அவரது பெயரில் அம்மையப்பன் கிராமத்தில் 1 ஏக்கர் பரப்பளவில் 8,000 ஏக்கர் சதுர அடியில் பிரம்மாண்ட மணிமண்டபம் ஒன்றை கட்டியிருக்கிறார் தொழிலதிபர் அமீருதீன்.

பார்ப்பதற்கு தாஜ்மஹாலை போன்றே காணப்படும் இந்த மணிமண்டபம் முழுக்க முழுக்க ராஜஸ்தானிலிருந்து கொண்டு வரப்பட்ட வெள்ளை பளிங்கு கற்களால் கட்டப்பட்டதாகும். இதனை சாதி மதம் பாகுபாடின்றி அனைத்து தரப்பினரும் பார்வையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பது கூடுதல் தகவலாகும்.
மணிமண்டபத்துடன் சேர்த்து மதரஸா, பள்ளிவாசலையும் கட்டியுள்ளார் அமிருதீன். இரவு நேரங்களில் வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் இக்கட்டிடத்தை பார்க்கும் போது வளைகுடா நாட்டில் உள்ள பள்ளிவாசல்கள் போன்ற தோற்றத்தில் காட்சியளிக்கின்றன.

பெற்றோரை முதியோர் இல்லத்தில் தவிக்கவிடும் பிள்ளைகளுக்கு மத்தியில் தாயாருக்காக தாஜ்மஹால் கட்டக் கூடிய பிள்ளைகளும் இருக்கத் தான் செய்கிறார்கள்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications