அவதூறு வழக்கில் விஜயகாந்த் நேரில் ஆஜராக கோர்ட் உத்தரவு!
ஜெயலலிதா பற்றி அவதூறாக பேசிய வழக்கில் விஜயகாந்த் ஆஜராகாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டு எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஸ்ரீவில்லிப்புத்தூர்: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், ஏப்ரல் 13 ஆம் தேதி தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேரில் ஆஜராக ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2012 -ம் ஆண்டு விருதுநகரில் நடைபெற்ற தே.மு.தி.க. பொதுக்கூட்டத்தில் அக் கட்சியின் தலைவர் விஜயகாந்த், அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாகப் பேசியதாக ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அரசு வழக்கிறிஞர் மங்களசாமி வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு விசாரணைக்கு மார்ச் 2-ம் தேதி விஜயகாந்த் நேரில் கண்டிப்பாக ஆஜராக கடந்த டிசம்பர் 22-ம் தேதி நீதிபதி ஏற்கனவே உத்தரவிட்டிருந்தார். ஆனால் அவர் உடல் நலம் சரியில்லாததால் ஆஜராக முடியவில்லை என்று அவரது தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இன்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கே.சிவக்குமார், ஏப்ரல் 13-ம் தேதி வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார். மேலும் அன்றைய தினம் விஜயகாந்த் கண்டிப்பாக நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும், தவறும்பட்சத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உத்தரவிட்டார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications