சென்னை அருகே இன்று காலை கரையை கடக்கிறது தாழ்வு மண்டலம்: இரவு முழுவதும் கனமழை பெய்யும் !
சென்னை: சென்னைக்கு தென்கிழக்கே 120 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுமண்டலம், இன்று காலை 5.30 மணிக்கு சென்னை அருகே கரையை கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இலங்கைக்கு அருகே வங்கக் கடலில் கடந்த 14 ஆம் தேதி உருவான காற்றழுத்த தாழ்வுநிலை, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது.

இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த தாழ்வு மண்டலமாக தற்போது வலுவடைந்து சென்னைக்கு தென்கிழக்கே 120 கி.மீ மையத்தில் மையங்கொண்டுள்ளது. அது இன்று காலை 5.30 மணிக்கு சென்னை - ஆந்திரா இடையே கரையை கடக்கும் என எதிர்பாக்கப்படுகிறது.
தாழ்வு மண்டலம் சென்னை அருகே கரையை கடந்து செல்லும் போது, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் மிக அதிக கன மழை பெய்யும். சுமார் 25 செ.மீ. வரை மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது. மேலும், மணிக்கு 50 முதல் 60 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும்.
கடலூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் 12 செ.மீ வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தஞ்சை மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்பு குறித்து '1077' என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் சுப்பையன் தெரிவித்துள்ளார்.
சென்னையை பொறுத்தவரை நகரின் பெரும்பாலான பகுதிகளில் இன்றிரவு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால் பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். மேலும், மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தற்போது கிண்டி, தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை, ஈக்காட்டுத்தாங்கல், கோடம்பாக்கம், மயிலாப்பூர், பாரிமுனை, ராயபுரம், தரமணி, பல்லாவரம், குரோம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
சென்னையில் நேற்று காலை முதல் இரவு 8 மணி வரை 5.9 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. மீனம்பாக்கத்தில் 4.5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் 14 செ.மீ., திருவாரூர் மற்றும் செம்பரம்பாக்கத்தில் தலா 12 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
வெளுத்து வாங்கப் போகும் கனமழை! இரவோடு இரவாக 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! வானிலை மையம் எச்சரிக்கை -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications