அடுத்த 'செக்'.. முறைகேடு சிக்கலில் எடப்பாடி! லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை.. ‛ஓகே’ சொன்ன தமிழக அரசு
சென்னை: கடந்த அதிமுக ஆட்சியில் 11 மருத்துவக் கல்லூரிகள் கட்டியதில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீதான புகார் குறித்து விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்பு துறைக்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியில் 2017ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரை தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி, திருவள்ளூர், அரியலூர் என 11 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் கட்டப்பட்டன. இவ்வாறு மருத்துவமனைகள் கட்டுவதற்கு மத்திய சுகாதாரத்துறை சில வழிக்காட்டுதல்களை வழங்கும். ஆனால் இந்த புதிய 11 மருத்துவ கல்லூரிகளில் இந்த வழிக்காட்டுதல்கள் பின்பற்றப்படவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்தது. இந்த புகார்களையடுத்து ஆதாரங்களை திரட்டிய லஞ்ச ஒழிப்புத்துறை எடப்பாடி பழனிசாமி மீது விசாரணை நடத்த அனுமதி கேட்டிருந்தது.
ஏனெனில் இந்த கட்டிடங்கள் கட்டப்பட்ட காலத்தில் முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமிதான், பொதுப்பணித்துறையையும் கவனித்து வந்தார். பொதுப்பணித்துறையின் கீழ்தான் இந்த கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. எனவேதான் எடப்பாடி பழனிசாமி மீது விசாரணை நடத்த வேண்டும் என்று லஞ்ச ஒழிப்புத்துறை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அனுமதி கோரியிருந்தது. இதில் ஈபிஎஸ் மீது மட்டுமல்லாமல் ஒப்பந்ததாரர்கள், அரசு பொறியாளர்கள் என அனைவர் மீதும் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்த இருக்கிறது.












Click it and Unblock the Notifications