அண்ணா பல்கலை பொறியியல் தேர்வில் 'அம்மா' கேள்வி - உருப்படுமா தமிழக உயர் கல்வி?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் எவ்வளவு கேவலமான வகையில் ஆட்சி நடக்கிறது என்பதற்கு இன்னொரு உதாரணம் அரங்கேறி இருக்கிறது. அண்ணா பல்கலைக்கழகம் அதற்கு ஒரு முத்தாய்ப்பினை வைத்து தலையில் மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்டுள்ளது.

சென்னையே வெள்ளக் காடாய் மாறிய போதும், கடலூர் கண்ணீர் கடலில் தத்தளித்த நேரத்தில் கூட ஆளும் கட்சியினைச் சேர்ந்தவர்கள் போட்டது "அம்மா" கோஷம் மட்டும்தான்.

செமஸ்டரில் காத்திருந்த அதிர்ச்சி

செமஸ்டரில் காத்திருந்த அதிர்ச்சி

இந்த நிலையில் தமிழகத்தில் பொறியியல் படிக்கும் மாணவர்கள் செமஸ்டர் தேர்வில் அமர்ந்தபோது காத்திருந்தது பெரிய அதிர்ச்சி.

மழைக்கு பின் தேர்வு

மழைக்கு பின் தேர்வு

அண்ணா பல்கலைக்கழகத்தால் நடத்தப்பட்டு வருகின்ற உயர்கல்விகளான பி.இ மற்றும் பி.டெக் தேர்வுகள் மழையால் தள்ளி வைக்கப்பட்டு தற்போது மீண்டும் நடத்தப்பட்டு வருகின்றது.

முதல் கேள்வியிலேயா?

முதல் கேள்வியிலேயா?

இதில் "கிரிப்டோகிராபி அண்ட் நெட்வொர்க் செக்யூரிட்டி" எனப்படும் பாடப்பிரிவு தேர்வும் நடைபெற்றது. இது கம்யூட்டர் சயின்ஸ் மற்றும் இன்பர்மேஷன் டெக்னாலஜி மாணவர்களுக்கான தேர்வு ஆகும். இந்தத் தேர்வில் முன்னதாக கேட்கப்படும் 2 மதிப்பெண் கேள்விகளில் முதல் கேள்வியே "அம்மா" என்ற வார்த்தையை என்கிரிப் செய்து விவரி என்பதுதான்.

கடவுச் சொல் காப்பு முறை:

கடவுச் சொல் காப்பு முறை:

என்கிரிப்ட் தொழில்நுட்பம் என்பது ஒரு வார்த்தையை கடவுச் சொல் அதாவது பாஸ்வேர்டாக வைக்கும் போது அதனை மற்றவர்கள் அறியாத வகையில் எழுதும் ஒரு தொழில்நுட்பம்.

எதுக்கு இந்த வார்த்தை

எதுக்கு இந்த வார்த்தை

இந்நிலையில் இந்த கேள்வியால் மாணவர்களிடமும், பெற்றோரிடமும் குழப்பமே எழுந்துள்ளது. அண்ணா பல்கலை இது ஒரு சாதாரண கேள்விதான் என்று விளக்கமளித்தாலும், மாணவர்களோ எத்தனையோ வார்த்தைகள் இருக்கும் நிலையில் அதென்ன "அம்மா" என்ற வார்த்தை என்ற கேள்வி சுற்றிச் சுழல்வதுதான் நிதர்சனமான உண்மை. உயர்கல்வி கேள்வித்தாளில் கூட இப்படிப்பட்ட கேள்விகளைத் திணிப்பது எந்தவிதத்தில் நியாயம் என்பது தெரியவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+