தீண்டாத்திருமேனியனே.. ஆன்மீக இசை குறுந்தகடு வெளியீட்டு விழா!
சென்னையில் அன்னபூரணி கிரியேஷன்ஸ் சார்பில் தீண்டா திருமேனியனே இசை குறுந்தகடு வெளியீட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது.
சென்னை: வடபழனி வேங்கிஸ்வரர் கோவிலில் அன்னபூரணி கிரியேஷன்ஸ் சார்பில் தீண்டாத் திருமேனியனே ஆன்மீக இசை குறுந்தகடு வெளியீட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது.
திருப்பாசூர், திருமால்பூர், திருவாலங்காடு, திருநின்றவூர், கூவம் ஆகிய திருத்தலப்பெருமை புகழ்பாடும் தீண்டா திருமேனியன் சுயம்பு வரலாறு அடங்கிய பாடல்களை தொகுத்து இசைக் குறுந்தகடு வெளியிடப்பட்டது.
சென்னை வடபழனி வேங்கிஸ்வரர் கோவிலில் இந்த விழா நடைபெற்றது.

மதநல்லிணக்க கூட்டமைப்பு தேசிய தலைவர் சிவக்குமார், இசைக்குறுந்தகட்டை வெளியிட மஹாகுரு மகாலிங்கம் குருசாமி, அகத்தீஸ்வர யோக சித்ராலயத்தின் அரவிந்தன் மற்றும் திருவாச மன்ற தலைவர் மணிவாசகம் ஆகியோர் குறுந்தகட்டை பெற்றுக்கொண்டனர்.
இந்த 10 பக்தி பாடல்களையும் கவிஞர்கள் மாத்தூர் சந்திரசேகர், சிவபாஸ்கர் ஆகியோர் எழுதியுள்ளனர். கருமாரி கர்ணா, எஸ்பிபி ராம், அம்ருதா, பவன், ஏழுமலை, சிவபாஸ்கர் ஆகியோர் பாடல்களை பாடியுள்ளனர்.

இந்த பக்தி ஆல்பத்திற்கு தெய்வீக இசைத்தென்றல் கருமாரி கர்ணா இசையமைத்துள்ளார். இதனை இயக்குநர் கலைமணி இயக்கியுள்ளார்.
இந்த இசை வெளியீட்டு விழாவில் தெய்வீக இசைத்தென்றல் கருமாரி கர்ணாவின் பக்தி இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு தீண்டாத் திருமேனியனே பக்திபாடல் குறுந்தகடு மற்றும் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications