ச்சீ.. சொகுசு வாழ்க்கைக்காக இப்படியா? இன்ஸ்ட்டா பிரபலத்தை தூக்கிய போலீஸ்.. என்னாச்சு? யார் இவர்?
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் வீடு புகுந்து நகை, பணத்தை திருடிய வழக்கில் இன்ஸ்ட்டாகிராம் பிரபலமான இளம்பெண் ஒருவரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். வீட்டில் இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்ய ரீல்ஸ் எடுத்து கொண்டிருந்தபோது அவர் போலீசில் சிக்கினார். அவரிடம் போலீஸ் விசாரணை நடத்திய நிலையில் திருட்டு தொடர்பாக அவர் கூறிய காரணம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாட்டில் சமீபகாலமாக சமூக வலைதள பிரபலங்கள் ஏதேனும் குற்றங்களில் ஈடுபட்டு போலீஸ் வழக்குகளை எதிர்கொள்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர். போக்குவரத்து விதிமீறல், ஆபாச பேச்சு, மிரட்டல் பேச்சு என பல்வேறு வகையான சிக்கல்களை அவர்களே உருவாக்கி எதிர்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் தான் தற்போது இன்ஸ்ட்டாகிராம் பிரபலமான இளம்பெண் ஒருவர் சொகுசு வாழ்க்கை வாழ ஆசைப்பட்டு வீடு புகுந்து நகை, பணத்தை திருடிய சம்பவம் தமிழ்நாட்டில் நடந்துள்ளது. அதுபற்றிய விபரம் வருமாறு:

நகை, பணம் திருட்டு
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர் பகுதியை சேர்ந்தவர் சபாபதி. இவரது மனைவி மாலதி. கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரது வீட்டில் இருந்து 3 பவுண் தங்க நகை மற்றும் ரூ.10 ஆயிரம் மாயமானாது. யாரோ வீட்டுக்குள் நுழைந்து நகை, பணத்தை திருடி சென்றது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் போலீசில் புகார் செய்தனர்.

சிசிடிவியில் பதிவான காட்சி
இந்த புகாரின் போரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். மேலும் சபாபதி-மாலதி தம்பதியின் வீட்டை சுற்றி இருக்கும் சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது இளம்பெண் ஒருவர் அவர்களின் வீட்டுக்கு ஸ்கூட்டியில் வந்து செல்வது தெரியவந்து. மேலும் அந்த ஸ்கூட்டியில் நம்பர் பிளேட் இல்லாமல் இருந்ததும் தெரியவந்தது. இதனால் போலீசார் இளம்பெண் மீது சந்தேகம் அடைந்தனர்.

மண்ணிவாக்கத்தை சேர்ந்தவர்
இதையடுத்து கேமராவில் பதிவான அந்த இளம்பெண்ணின் உருவத்தை வைத்து போலீசார் விசாரணையை தொடங்கினர். அப்போது அந்த இளம்பெண் மண்ணிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் என்பதும், அவரது பெயர் அனிஷ்குமாரி என்பதையும் போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து அவரது வீட்டுக்கு சென்ற போலீசார் அனிஷ் குமாரியை பிடித்து விசாரித்தனர்.

இன்ஸ்டா பிரபலம் கைது
அப்போது திருட்டை ஒப்புக்கொள்ளாத அனிஷ் குமாரி தன்னை அப்பாவி போல் காட்டிக்கொண்டார். இருப்பினும் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியபோது அனிஷ் குமாரி திருட்டை ஒப்புக்கொண்டுள்ளார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். போலீசில் கைது செய்வதற்கு முன்பாக அவர் ரீல்ஸ் எடுத்து கொண்டிருந்தார். மேலும் திருட்டு பற்றி போலீசார் விசாரித்தனர். அப்போது வீட்டில் அவர் ஏன் திருடினார்? என்பது பற்றி விளக்கினார். இதனை கேட்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.

சொகுசு வாழ்க்கை
அதாவது இன்ஸ்ட்டாகிராமில் ரீல்ஸ் போட்டு பிரபலமான அனிஷ் குமாரி, சொகுசு வாழ வாழ நினைத்துள்ளார். ஆனால் அவருக்கு போதிய அளவில் வருமானம் கிடைக்கவில்லை. இதனால் அவர் திருட்டில் இறங்கியது தெரியவந்தது. மேலும் திருடிய நகை, பணம் பற்றி கேட்டதற்கு, பணத்தை செலவு செய்ததாகவும், நகையை வீட்டு ப்ரீட்ஜில் வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதையடுத்து ப்ரீட்ஜில் இருந்த நகையை போலீசார் மீட்டனர்.

முன்பு நடந்தது என்ன?
மேலும் அனிஷ் குமாரி போலீசாரால் கைது செய்யப்படுவது இது முதல்முறைல்ல. இதற்கு முன்பும் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அதாவது பைக் ஒன்றை திருடி ஓஎல்எக்ஸ் மூலம் விற்பனை செய்த வழக்கில் அவர் போலீசாரால் கைது செய்யப்பட்ட நிலையில் மீண்டும் கைவரிசை காட்டி போலீசிடம் சிக்கியுள்ளார். இதையடுத்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்திய போலீசார் சிறையல் அடைத்தனர்.
-
கங்கணம் கட்டிக்கொண்டு வேலை.. மொத்த தமிழக பாஜகவும் ஸ்டன் ஆகி நிற்குதே.. யாருங்க இந்த த பா ஜி? -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது!












Click it and Unblock the Notifications