அதிர்ச்சித் தகவல். கொடநாடு பங்களாவில் இதுவரை 3000 பவுன் நகைகள் கொள்ளையாமே?
ஜெயலலிதாவின் கொடநாடு பங்களாவில் இருந்து இதுவரை 3000 சவரன் நகைகள் வரை கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நீலகிரி : ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட் பங்களாவில் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டது முதன் முறையல்ல. பலமுறை கொள்ளை நடந்துள்ளதாகவும், 3000 சவரன் நகைகள் வரை கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொடநாடு பங்களாவில் கடந்த 23ஆம் தேதி நள்ளிரவில் காவலாளி ஓம் பகதூர் கொலை செய்யப்பட பரபரப்பு பற்றிக்கொண்டது. மூன்று வாகனங்களில் வந்த 11 பேர் பங்களாவில் இருந்த அறைகளை உடைத்து விலை மதிப்பு வாய்ந்த நகைகள், பணம், ஆவணங்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
கொள்ளையை தடுக்க முயன்ற ஒரு காவலாளி கொலை செய்யப்பட, மற்றொலு காவலாளி உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கொடநாடு பங்களா
கடந்த செப்டம்பர் மாதம் அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட நாளில் இருந்தே கொடநாடு பங்களாவில் மர்ம சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. போயஸ் தோட்ட வீட்டில் இருந்து கடத்தப்பட்ட நகைகள், ஆவணங்கள், பணம் கொடநாடு பங்களாவில்தான் பதுக்கி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

பெட்டி பெட்டியாக நகை, பணம்
ஜெயலலிதா நகை அணியாவிட்டாலும் பெட்டி, பெட்டியாக நகைகளும், பணமும் அவரது வீட்டில் இருந்துள்ளது. இவை எல்லாம் அவர் உடல் நலமில்லாமல் போன பிறகு சசிகலா குடும்பத்தினர் ஆண்டு அனுபவித்துள்ளனர்.

பணமதிப்பு நீக்கம்
நவம்பர் மாதம் பணமதிப்பு நீக்க அறிவிப்புக்கு பிறகு பாதிக்கு மேற்பட்ட பணம் செல்லாத நோட்டுக்களாகவே போனது. ஆனால் நகைகள் அப்படியே இருந்துள்ளன. இதில் பாதிக்கும் மேற்பட்டவை மன்னார்குடிக்கும், மீதி கொடநாடு பங்களாவிலும் பதுக்கப்பட்டுள்ளன.

ஜெயலலிதா மரணம்
டிசம்பர் மாதம் ஜெயலலிதா மரணமடைந்த பின்னர் கொடநாடு பங்களா சசிகலா வசமானது. பாதுகாவலர்கள் அதிகம் இருந்ததாலும் அவர்கள் வட இந்தியாவை சேர்ந்தவர்கள் என்பதால் பங்களாவிற்குள் பணியில் இருந்த சசிகலாவின் உறவினர்களுக்கு இது சாதகமாகப் போனதாம். அடிக்கடி பங்களாவிற்கு சிலர் வந்து சென்றுள்ளனர்.

நகைகள் விற்பனை
ஜெயலலிதா மரணத்திற்குப் பிறகு சேலம் மாவட்டத்தில் பழைய நகைகள் அதுவும் விலை உயர்ந்த நகைகள் விற்பனைக்கு வந்துள்ளதாக தெரிகிறது. இந்த நகைகளை குறைந்த விலைக்கு வாங்கி அவற்றை அதிக விலைக்கு விற்றுள்ளனர் நகைக்கடைக்காரர்கள்.

கொலை, கொள்ளை
ஏப்ரல் 23ஆம் தேதி காவலாளி கொலை செய்யப்பட்டதால் இந்த கொள்ளை சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. அதுவும் டிடிவி தினகரன் டெல்லி சென்ற போது நடந்த சம்பவம் என்பதால் இந்த கொள்ளையில் சசிகலாவிற்கு நெருக்கமான உறவினருக்கு தொடர்பிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

3000 சவரன் நகைகள்
கடந்த ஜனவரி முதல் அவ்வப்போது கொடநாடு பங்களாவில் இருந்து திருடு போன நகைகளின் மதிப்பு 3000 சவரனுக்கு மேல் இருக்கலாம் என்று கூறப்படும் நிலையில் சேலம், கோவை, சென்னை ஆகிய பகுதிகளில், உளவுப்பிரிவு போலீசார், ரகசிய விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி?












Click it and Unblock the Notifications