சென்னையை மிரட்டும் 85,000 தெரு நாய்கள்... கணக்கெடுப்பில் அதிர்ச்சித் தகவல்!
சென்னை: சென்னையில் மட்டும் சுமார் 85 ஆயிரம் தெருநாய்கள் உள்ளதாக சமீபத்தில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் மூலம் தெரிய வந்துள்ளது.
கடந்த சிலநாட்களுக்கு முன்னர் மூலக்கொத்தளம் சுடுகாட்டில் புதைக்கப் பட்டிருந்த அனாதை பிணமொன்றை நாய்கள் வெளியே எடுத்து கடித்துப் போட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் சுற்றித் திரியும் தெருநாய்களைப் பிடிக்க மாநகராட்சி சார்பில் நடவடிக்கை எடுக்கப் பட்டது.
மேலும், பிணத்தை சரியாக புதைக்காத ஊழியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளதாகவும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே சென்னை மாநகரில் சுமார் 85 ஆயிரம் தெருநாய்கள் சுற்றித் திரிவதாக தெரிய வந்துள்ளது.

கணக்கெடுப்பு...
கடந்த மே 30ம் தேதி சென்னையில் உள்ள அனைத்துப் பகுதிகளிலும் ஒரே நாளில் தெருநாய்களைக் கணக்கெடுக்கும் பணி நடந்தது.

85 ஆயிரம் தெருநாய்கள்...
இதன் மூலம், சென்னை முழுவதும் சுமார் 85 ஆயிரம் தெருநாய்கள் சுற்றித் திரிவது கண்டுபிடிக்கப் பட்டது.

விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகள்...
அதிலும் குறிப்பாக விரிவாக்கம் செய்யப் பட்ட பகுதியில் அதிக தெருநாய்கள் உள்ளதாக தெரிய வந்துள்ளது. மண்டலம் வாரியான தெருநாய்கள் விபரம் வெளியிடப்படவில்லை.

விரைவில் நடவடிக்கை...
கணக்கெடுப்பைத் தொடர்ந்து விரைவில் தெருநாய்களைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப் படும் என எதிர்பார்க்கப் படுகிறது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications