தினகரன் அணியில்தான் ஸ்லீப்பர் செல்கள் இருக்கிறார்கள்.. குண்டை தூக்கி போடும் ஓ.பி.எஸ்
டிடிவி தினகரன் அணியில் அவருக்கு எதிராகவே பலர் இருக்கிறார்கள் அவர்கள் என்னிடம் பேசி வருகிறார்கள் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: டிடிவி தினகரன் அணியில் அவருக்கு எதிராகவே பலர் இருக்கிறார்கள் அவர்கள் என்னிடம் பேசி வருகிறார்கள் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
தினகரனை சந்திக்கவும், ஆட்சியை கவிழ்க்கவும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், திட்டமிட்டார் என்று நேற்று தங்க தமிழ்ச்செல்வன் கூறினார். இதை இன்று காலை டிடிவி தினகரனும் உறுதி செய்தார்.
இந்த நிலையில் இந்த புகார்களுக்கு பதில் அளிக்கும் வகையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்தார்.

மூன்று முறை
அவர் தனது பேட்டியில், மூன்று முறை முதல்வராக இருந்துள்ளேன், அந்த திருப்தியே போதும்; ஆட்சியை கவிழ்த்து விட்டு முதல்வராக வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை .நான் இருக்கும் இயக்கத்துக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என நினைப்பவன்.

மனம் திருந்தி
மனம் திருந்தி நல்ல வார்த்தை சொல்வார் என்ற நம்பிக்கையில்தான் டிடிவி தினகரனை சந்தித்தேன். ஆனால் கட்சியை கைப்பற்றவே அவர் நினைத்தார்.எனக்கிருக்கும் நல்ல பெயரை கெடுக்க வேண்டுமென தினகரனும் அந்த கொடிய கூடாரமும் வேலை செய்து கொண்டிருக்கிறது.

தொண்டர்கள் இடையே எழுச்சி
அதிமுக தொண்டர்களிடையே ஏற்பட்டுள்ள எழுச்சியை கண்டு, தினகரன் குழப்பமான மனநிலைக்கு சென்றுள்ளார்.ஜெயலலிதாவிடம் என்னை அறிமுகப்படுத்தியாக தினகரன் கூறுகிறார்; அப்போது தினகரன் அதிமுகவில் எல்.கே.ஜி, நான் அதிமுகவில் பல்கலைக்கழக மாணவன்.

எங்கள் பக்கம்
தினகரன் அணியில் அவருக்கு எதிராகவே பலர் இருக்கிறார்கள். அவருக்கு அருகில் 18 பேர் இல்லை. அவருக்கு எதிராக 7 பேர் அவர் அணியில் இருக்கிறார்கள். அவரை பேசுவது சரியில்லை என்று அவர்கள் என்னிடம் கூறினார்கள். அவர்கள் எல்லோரும் சீக்கிரம் வெளியே வருவார்கள் என்றார்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications